திடீர் திருமணம் செய்துக்கொண்ட அனுபமா… தாலியுடன் வெளியிட்ட போட்டோவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Author: Rajesh
29 January 2024, 9:35 pm

மலையாள மொழி நடிகையான அனுபமா பரமேஸ்வரன் முதலில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார். அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்க தொடர்ந்து மற்ற மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

தமிழில் தனுஷின் ‘கொடி’ படம் மூலம் தமிழில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் அதன் பின் அதர்வா ஜோடியாக, ‘தள்ளிப்போகாதே’ படத்தில் நடித்தார். தமிழில் அவர் நடித்த இரண்டு படங்களும் சுமாரான வரவேற்பையே பெற்றன.

இதனால் தமிழில் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அனுபமாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனையடுத்து தெலுங்கு பக்கம் ஒதுங்கினார் அனுபமா. தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்து அங்கு முகமறியப்பட்டார். ஆனால் பெரிதாக பிரபலம் ஆகவில்லை.

இதனால் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வரும் அனுபமா Tillu Square என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் மணப்பெண் அலங்காரத்தில் தாலியுடன் அனுபமா வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்து நெட்டிசன்ஸ் ஷாக் ஆகிவிட்டனர்.

ஆனால், உண்மையில் அனுபமா தற்போது நடித்துக்கொண்டிருக்கும் சைரன் படத்தின் ஷூட்டிங்கில் எடுத்த போட்டோ தான் அது. அந்த படத்தில் அனுபமா ஜெயம் ரவியை திருமணம் செய்வது போல காட்சி உள்ளது என்பது குறிப்பித்தக்கது.

  • Game Changer trailer release ராம் சரண் இத்தன கெட்டப்பா…பிரம்மாண்டமாக வெளிவந்த கேம் சேஞ்சர் ட்ரைலர்..!
  • Views: - 516

    0

    0