நமீதாவுடன் வருட கணக்கில் ரகசிய உறவு?.. பிரபல நடிகர் ஓபன் டாக்..!
Author: Vignesh30 January 2024, 12:57 pm
கவர்ச்சி நடிகையான நமீதா தமிழ் ,தெலுங்கு , கன்னடம் ,ஹிந்தி மொழிப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் “எங்கள் அண்ணா” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தமிழில் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடிக்க தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரத்துடங்கினார்.
ஆம், நடிகை நமீதாவுக்கு தமிழ்நாட்டில் ரசிகர் ஒருவர் கோவிலே கட்டி உள்ளார். தமிழில் டாப் நடிகையாக இருந்த நமீதாவுக்கு படங்களுக்கு படம் உடல் எடை கூடிக்கொண்டே போக . மெல்ல மெல்ல மார்க்கெட்டை இழந்தார். இதனால் இடையில் கொஞ்ச காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்ட நடிகை நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் Re -Entry கொடுத்தார். அதே ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான வீரேந்திர சவுத்திரியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
திருமணத்துக்குப் பிறகு முக்கியமான கதாபாத்திரங்கள் கொண்ட படத்தை மட்டுமே அவர் தேர்வு செய்து நடித்து வந்தார். ஜீ தமிழிலில் ஒளிபரப்பாகி வரும் ‘புதுப்புது அர்த்தங்கள்’ சீரியலில் நடிகை நமீதா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சரத்குமார் நமீதா உடனான உறவு குறித்து பேசியுள்ளார். அதில், அவர் நமிதா எனக்கு ஒரு நல்ல தோழி அவருடைய திருமணத்திற்கு அதிகமாக யாரையும் அழைக்கவில்லை. ராதிகாவும் நானும் தான் அழைக்கப்பட்டோம். திருமண மேடையில் நமீதா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார் என்றும், ஒரு சில சமயங்களில் எனக்கும் நமீதாவுக்கும் காதல் என்றெல்லாம் செய்திகள் பரப்பப்பட்டது. ஆனால், எங்களுக்கு இடையே இருந்தது உண்மையான நட்பு மட்டுமே என்று தெளிவாக தெரிவித்துள்ளார்.