ஆட்சிக்கு வந்த 31 மாதங்களில் திமுக சம்பாதித்த தொகை ரூ.70 ஆயிரம் கோடி : ஆதாரத்துடன் அண்ணாமலை குற்றச்சாட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2024, 9:23 pm

ஆட்சிக்கு வந்த 31 மாதங்களில் திமுக சம்பாதித்த தொகை ரூ.70 ஆயிரம் கோடி : ஆதாரத்துடன் அண்ணாமலை குற்றச்சாட்டு!

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டசபை தொகுதியில், ‛‛என் மண், என் மக்கள்” பாதயாத்திரையை அண்ணாமலை மேற்கொண்டார்.

அப்போது அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் ஆளும் கட்சியை சார்ந்தவர்களுக்கான அரசியலாக உள்ளது. சாதாரண மக்களுக்கான அரசியலாக இல்லை. படிப்புக்கு ஏற்ற வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம் இல்லை.

தண்ணீர் பிரச்னையால் விவசாயம் செய்ய முடியவில்லை. இந்த யாத்திரையின் மூலம் புதிய அரசியலை கொண்டு வர வேண்டும். பா.ஜ., ஆட்சியில் ஜாதி, மத, அடாவடி, குடும்ப அரசியலுக்கு இடம் கிடையாது.

தமிழகத்தின் முக்கியமான பிரச்னை, தரமான கல்வி கிடைக்கவில்லை. தமிழகத்தில் அரசு பள்ளிகள் தரமில்லாமல் இருக்கிறது. எந்த பணமும் வாங்காமல், உலக தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி நினைக்கிறார். ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களும், இந்த சமுதாயத்தில் முக்கியமான மனிதர்களாக வர வேண்டும்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 31 மாதங்கள் ஆகிறது. 70ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து வைத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 315

    0

    0