அதிமுக அமைக்கும் மெகா கூட்டணி.. படு வேகத்தில் பேச்சுவார்த்தை : திமுகவுக்கு அல்வா கொடுத்த முக்கிய கட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2024, 9:22 am

அதிமுக அமைக்கும் மெகா கூட்டணி.. படு வேகத்தில் பேச்சுவார்த்தை : திமுகவுக்கு அல்வா கொடுத்த முக்கிய கட்சி!

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, நிர்வாகிகளுடன் ஆலோசனை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்வதில் அ.தி.மு.க. மும்முரமாக உள்ளது.

அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை சார்ந்த நிர்வாகிகள் பா.ம.க., தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பா.ம.க., தே.மு.தி.க.வின் எதிர்பார்ப்புகளை அ.தி.மு.க. கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பா.ம.க., தே.மு.தி.க.வுடனான கூட்டணியை உறுதி செய்யும் பணியில் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வலுவான கூட்டணி அமைக்க அ.தி.மு.க. வியூகம் அமைத்துள்ளது. பாமகவை திமுகவில் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியான நிலையில் இந்த செய்தி அறிவாலயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 428

    0

    0