இந்த மாதிரி லுக்குல Shoot பண்ணா கதற தான் செய்வானுங்க.. தனுஷை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
31 January 2024, 11:06 am

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அண்மையில் வெளியான ’கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்திருந்தார். பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான இப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போடுகிறது. இப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

dhanush next movie update

அந்த படத்தை தொடர்ந்து தனுஷ் தனது 51வது படத்தில் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பூஜை உடன் தொடங்கியது. தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் அந்த படத்தில் நடிகர் நாகார்ஜூனாவும் முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்நிலையில் இன்று இப்படத்தின் ஷூட்டிங் திருப்பதி மலையின் அடிவாரத்தில் இருக்கும் அலிபிரி என்ற இடத்தில் நடைபெற்றது. அதனால் சாலையில் போக்குவரத்துக்கு வேறு பாதைக்கு மாற்றப்பட்டு இருந்தது.

இதனால், கோவிலுக்கு வந்த பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்தை திருப்பி விட பவுன்சர்களை படக்குழு பயன்படுத்தி இருக்கிறது. எதிர்ப்புகள் வந்ததால் போலீசார் போக்குவரத்தை மாற்றி பழைய பாதையிலேயே அனுமதித்து இருக்கின்றனர். இது தொடர்பாக தற்போது பக்தர்கள் பலர் போலீசில் புகார் கூறி இருக்கின்றனர். இதனால் தனுஷ் 51 படக்குழுவிற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது.

dhanush

மேலும், அனுமதி வாங்கி நடத்தப்பட்ட அப்படத்தின் ஷூட்டிங்கின் போது பொதுமக்களுக்கு கடும் அவதி ஏற்பட்டதால் கொடுத்த அனுமதியினை மறுத்துள்ளனர். இந்நிலையில், அப்படத்தில் தனுஷ் பிச்சைக்காரனாக அதுவும் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு நடுரோட்டில் நிற்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் கசிந்த நிலையில், பர்ஸ்ட் லுக்கே வெளியாகாத நிலையில் தனுஷின் அந்த நியூ லுக் லீக் ஆனதால் பட குழுவினர் மற்றும் தனுஷ் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும், இதனைப் பார்த்த நெட்டிசன்கள் திருப்பதில இந்த மாதிரி லுக்குல இருந்தா கதறாம வேற என்ன செய்வாங்க என்று கிண்டலாகவும், கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 325

    0

    0