நடக்க முடியாமல் வழிதவறி வந்த குட்டி சிறுத்தை மீட்பு… மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த வனத்துறையினர்!!
Author: Babu Lakshmanan31 January 2024, 2:23 pm
நடக்க முடியாத நிலையில் காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த குட்டி சிறுத்தை, சிற்றார் அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.
குமரி மாவட்டம் சிற்றார் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இன்று காலை 5 மணி அளவில் வலையில் சிக்கி நடக்க முடியாத நிலையில் குட்டி சிறுத்தை ஒன்று இருப்பதாக அப்பகுதியை சார்ந்த மக்கள் களியல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் குட்டி சிறுத்தை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில் காட்டில் இருந்து குட்டி சிறுத்தை வழி தவறி வந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். சிகிச்சை முடிந்த பின்பு மாவட்ட வனத்துறை அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து தொடர் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்