பாஜக பக்கம் சாயும் கிறிஸ்தவர்களின் வாக்குகள்.. U TURN அடித்த முக்கிய கட்சி : அதிர்ச்சியில் ஆளுங்கட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan31 January 2024, 4:32 pm
பாஜக பக்கம் சாயும் கிறிஸ்தவர்களின் வாக்குகள்.. U TURN அடித்த முக்கிய கட்சி : அதிர்ச்சியில் ஆளுங்கட்சி!!
கேரளாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் பிசி ஜார்ஜ். காங்கிரஸ் கட்சியில் பயணித்து வந்த பிசி ஜார்ஜ் 2000-ம் ஆண்டில் கேரளா காங்கிரஸ் (ஜோசப்) கட்சியில் இணைந்தார்.
பின்னர் கேரள காங்கிரஸ் (மதச்சார்பற்றது) என்ற கட்சி உருவானது. இக்கட்சி இடதுசாரிகளின் ஐக்கிய முன்னணியில் இணைந்திருந்தது. பின்னர் கேரளா காங்கிரஸ் (மணி) கட்சியுடன் இணைந்தது.
கேரள காங்கிரஸ்( மதச்சார்பற்றது) கட்சியில் இருந்து பிசி ஜார்ஜ் வெளியேற்றப்பட 2019-ல் கேரள ஜனபக்ஷம் கட்சியை தொடங்கினார். இப்படி மாறி மாறி வந்தாலும் தொடர்ந்து எம்எல்ஏ பதவியை வென்றார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் கேரள ஜனபக்ஷம் கட்சி இடம் பெற்றிருந்தது. பூஞ்சார் சட்டசபை தொகுதியில் 7 முறை மக்கள் பிரதிநிதியான பிசி ஜார்ஜ் 2021 சட்டசபை தேர்தலில் பூஞ்சார் தொகுதியில் பிசி ஜார்ஜ் தோல்வியைத் தழுவினார்.
தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் கடைசியாக பாஜகவிலேயே ஐக்கியமாகவும் பிசி ஜார்ஜ் முடிவெடுத்து இன்று டெல்லிக்குப் போய் இணைந்துவிட்டார்.
லோக்சபா தேர்தலில் கிறிஸ்தவர்கள் வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என்ற கணக்குடன் பிசி ஜார்ஜ் கட்சியை பாஜக இணைத்துக் கொண்டிருக்கிறதாம்.