பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொண்ட ரைசா வில்சன் – Before & After முகத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!
Author: Vignesh1 February 2024, 11:00 am
மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கிய நடிகை ரைசா வில்சன் விளம்பர படங்களில் நடித்து சினிமாவில் நுழைந்தார். தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலுக்கு அசிஸ்டெண்டாக சின்ன வேடத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகம் ஆனார்.
அதன் பின்னர் கமல்ஹாசனால் நடத்தப்பட்ட பிக் பாஸ் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். தனது தோழி ஓவியா காதல் மோடில் சுற்றி கொண்டிருந்தாலும் தனக்குரிய கேமை நன்றாக ஆடிய ரைசா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.
அந்த திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்து அவருக்கான அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன்பின் உள்குத்து, தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ், அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என வரிசையாக பல படங்களில் நடித்தார்.
தொடர்ந்து நல்ல வாய்ப்புகளுக்காக படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் ரைசா தற்போது, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். அவரது, முகம் மாறி இருப்பது போல் தெரிகிறது. இதனால், ரைசா பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா என ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.