‘இந்தியாவின் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்’ மணிரத்னத்தின் முழு சொத்து எத்தனை கோடி தெரியுமா?

Author: Rajesh
1 February 2024, 11:00 am

தமிழ் சினிமாவில் வரலாற்று இயக்குனரான மணிரத்தினம் காலத்தால் அழிக்கமுடியாத படைப்பாளினியான கே. பாலச்சந்தர், பாலு மகேந்திரா வரிசையில் தனது தத்ரூபமான மாறுபட்ட கதை அம்சம் கொண்ட காதல், தீவிரவாதம், நாட்டின் நிலவரம், நடுத்தர வர்க்க மக்களின் நிலைப்பாடு, இராமாயண போன்ற பழம்பெரும் புராண கதைகள் ஆகியவற்றை நகர்ப்புற வாழ் மக்களை பின்னணியாக கொண்டு தனக்கே உரித்தான தனி ஸ்டைலில் படமெடுத்து மக்களை திரை ரசனையில் மூழ்கடித்தார்.

சிறந்த இயக்குனர் என்பதையும் தாண்டி தயாரிப்பு, திரைக்கதை எனப் பலத் துறைகளில் தடம் பதித்திருக்கிறார் மணிரத்தினம். பல்லவி அனுபல்லவி என்ற கன்னட திரைப்படத்தை இயக்கி அறிமுகம் ஆனார். அப்படத்தை தொடர்ந்து இதய கோவில், பகல் நிலவு, மௌன ராகம், நாயகன், தளபதி , ரோஜா , பம்பாய், இருவர், அலைபாயுதே,கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

Mani Ratnam at the Oh Kadhal Kanmani aka OK Kanmani Audio Success Meet Photos

இந்நிலையில் மணிரத்தினத்தின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி வியக்க வைத்துள்ளது. இயக்குனர், தயாரிப்பாளர் என ஒரு படத்துக்கு ரூ. 25 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வரும் மணிரத்தினம் ரூ. 150 கோடி சொத்து வைத்திருக்கிறாராம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 351

    0

    0