மலடியா? ஒரு கல்யாணத்துக்கு போக முடியல….. கேட்டு கேட்டு சாவடிக்குறாங்க – கிகி – சாந்தனு வேதனை!

Author: Rajesh
1 February 2024, 11:42 am

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வாரிசு குடும்பத்தில் இருந்து திரைத்துறையில் அறிமுகமான பலர் திறமையில்லாததால் பெரிய படங்களின் வாய்ப்புகள் கிடைத்தும் அடையாளம் தெரியாமல் போயியுள்ளனர். அந்த லிஸ்டில் இடம்பிடித்திருக்கும் வாரிசு நடிகர் தான் சாந்தனு பாக்யராஜ். இவர் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜின் ஒரே மகன் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

1998ஆம் ஆண்டு வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாந்தனு 2008ஆம் ஆண்டு சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தின் கதை முதலில் நன்றாக இருந்ததாம். ஆனால் மகனின் முதல் படம் மாபெரும் ஹிட் அடிக்கவேண்டும் என எண்ணிய பாக்யராஜின் அந்த கதையில் குறுக்கிட்டு சில மாற்றங்களை செய்யவே அது பிளாப் ஆகிவிட்டதாம். இதனால் அவர் தோல்வி பட ஹீரோவாக முத்திரைகுத்தப்பட்டு எழுந்திரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதனிடையே பிரபல தொகுப்பாளனியான கிகி விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் அண்மையில் வெளிவந்த ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்தது பற்றி சாந்தனு பல விஷயங்கள் குறித்து பேசினார்கள். அப்போது சாந்தனு தனக்கு குழந்தை இல்லாதது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். எங்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகியும் நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. அது எங்கள் தனிப்பட்ட விஷயம்.

kiki

ஆனால், அதற்காக சமூகத்தின் பார்வை எங்கள் மீது வேறு மாதிரி இருக்கிறது. கிகி ஒரு திருமணத்துக்கு கூட போக முடியவில்லை என்றும் எங்கே போனாலும் சில பூமர் ஆன்டிகள் நைஸாக வந்து குழந்தை எப்போன்னு கேட்டு டார்ச்சர் பண்றாங்க. அவர்களாகவே ஒரு கற்பனை செய்துக்கொள்கிறார்கள். எங்களுக்கு குழந்தையே பிறக்காது என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள். அது வரும்போது வரும். தயவுசெய்து அடுத்தவர்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் தலையிடாதீர்கள் என அதிரடியாக பதில் அளித்துள்ளனர்.

  • Who had SIX PACKS before Surya? சூர்யாவுக்கு முன்னாடி SIX PACKS வெச்சவன் எவன் இருக்கான்? அனல் பறந்த நடிகரின் பேச்சு!