நம்ம சந்திரமுகி லவ்வரை நியாபகம் இருக்கா?.. வினீத் மனைவி மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரல்..!

Author: Vignesh
2 February 2024, 10:00 am

தமிழ் சினிமாவை பொருத்தவரை 90 நடிகர்களை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அப்படி இப்போதும், நமது ஞாபகத்தில் இருக்கும் பிரபலம்தான் நடிகர் வினித். இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்.

actor vineeth

மலையாள சினிமாவை தாண்டி தமிழ், தெலுங்கு, மொழிகளிலும் பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை கொண்டவர். அதன் பிறகு, ஆவாரம்பூ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த இவர், முதல் படத்திலேயே அனைவரின் மனதையும் கவர்ந்தார் என்று சொல்லலாம்.

actor vineeth

அதன்பிறகு ஜாதிமல்லி, காதல் தேசம், சிம்ம ராசி, சுயம்வரம், வேதம், பிரியமான தோழி, உளியின் ஓசை என பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். சிறந்த நடிகர் என்பதை தாண்டி வினித் பரதநாட்டிய கலைஞராகவும் சிறந்து விளங்கியவர். இவர்தான் சந்திரமுகி முதல் பாகத்தில் சந்திரமுகியின் காதலனாகவும் நடித்திருந்தார்.

actor vineeth

இவர் நடிகர், நடனம், டப்பிங் ஆர்டிஸ்ட், நடன இயக்குனர் என பன்முகத் திறமைகளை கொண்டவர். நடிகர் வினித் 2004 ஆம் ஆண்டு ப்ரிசில்லா மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். தற்போது, வினித் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைகலாகி வருகிறது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 325

    0

    0