முடியலன்னா ஏன் புள்ள பெத்தீங்க…? தனுஷ் அப்பாவை நாக்கு புடுங்குற மாதிரி கேட்ட கேப்டன்!
Author: Rajesh1 February 2024, 8:36 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு முதல் திருடா திருடி, காதல் கொண்டேன் , சுள்ளான் , புதுப்பேட்டை, பொல்லாதவன் , ஆடுகளம் வேலையில்லா பட்டதாரி , மாரி , அசுரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது வர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் எந்த இடத்தை தக்கவைத்திருக்கிறார். அடுத்தடுத்து மாஸான திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் தனுஷ் வெளியிட்டிருந்தார். ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததால் தனுஷ் தனது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனுஷின் அக்கா கார்த்திகா தேவிக்கு கேப்டன் விஜயகாந்த் செய்த மிகப்பெரிய உதவி குறித்து தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது என் மகள் மருத்துவ படிப்பிற்கு உரிய மதிப்பெண் பெற்றும் அவரால் என்னால் ஆசைப்பட்ட டாக்டர் படிப்பு படிக்க வைக்க முடியவில்லை. அதனால் அதை நினைத்து மகள் அழுதுகொண்டிருந்த சமயத்தில் விஜயகாந்த் என் வீட்டிற்கு வந்தார்.
அப்போது விஷயம் அறிந்து என்னிடம் கேட்டார். அதற்கான போதிய பணம் இல்லை. டாக்டர் படிப்பெல்லாம் கோடீஸ்வரர்கள் படிக்கவைப்பார் என்னால் குடும்பத்தை மட்டும்தான் பார்க்க முடியும் என்றேன் அதற்கு கேப்டன் முடியலன்னா ஏன் புள்ள பெத்தீங்க? என கேட்டுவிட்டு உடனே ராமச்சந்திரா மருத்துவமனையில் சீட் வாங்கிக்கொடுத்தார். அவ்வளவு நல்ல உள்ளம் கொண்டவர் கேப்டன் என நன்றி கூறினார். இதோ அந்த வீடியோ: