கேவலம், மட்டமான குணம், சீக்கிரம் சரிஞ்சிடுவ…. நடிகர் கவினை டார் டாரா கிழித்த தயாரிப்பாளர்!

Author: Rajesh
2 February 2024, 3:44 pm

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான கவின் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து அதன் பின்னர் சீரியல் நடிகர் ஆனார். காணும் காலங்கள் என்ற தொடரில் ‘சிவா’ என்னும் கதாபாத்திரம் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார். சரவணன் மீனாட்சி 2 தொடரில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலம் ஆனார். அதன் பின்னர் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க துவங்கியது.

kavin

கடந்த 2017 ஆம் ஆண்டு சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்தார். இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் என்பவர் நடித்துள்ளார். அதன் பின்னர் தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று பேமஸ் ஆனார்.

அந்த நிகழ்ச்சியில் லாஸ்லியாவுடன் கடலை போட்டு காதல் ஜோடிகளாக பேசப்பட்டனர். வெளியில் வந்ததும் அவர்கள் காதலை பிரேக்கப் செய்துகொண்டு அவரவர் வேளைகளில் கவனம் செலுத்த கவின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தார். டாடா திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து அவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. அதன் பின் தனது சம்பளத்தை அதிரடியாக ரூ. 2 கோடி என உயர்த்தினார்.

இதனை விமர்சித்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன், ” கேவலம், மட்டமான குணம், சீக்கிரம் சரிஞ்சிடுவ, படம் உன்னாலயா ஓடுச்சு? உன்ன வச்சி கோடி கணக்கில் பணம் போட்டு ஓடுமா ஓடாதா என்ற பயத்திலும் நம்பிக்கை வைத்து படம் எடுத்தார் தயாரிப்பாளர். தயாரிப்பாளர் பல கோடி பணத்தை கொட்டி கொடுத்து ரிஸ்க் எடுத்து ரிலீஸ் செய்தார். நீ என்ன விஜய்யா?அஜித்தா? அடித்த படத்திற்கு ரூ. 2 கோடி கேட்கும் அளவிற்கு உனக்கு என்ன தகுதி இருக்கு என டார் டாராக கிழித்துவிட்டார்.

2 கோடி சம்பளம் கேட்க உனக்கு என்ன தகுதி இருக்கு | Kavin | Producer K Rajan Angry | Thalapathy68 | Leo
  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Close menu