பாஜகவுக்கு தொகுதியை விட்டுக் கொடுத்த ஆளுங்கட்சி : அப்செட்டில் நிர்வாகிகள் : வேட்பாளர் விரைவில் அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2024, 9:41 pm

பாஜகவுக்கு தொகுதியை விட்டுக் கொடுத்த ஆளுங்கட்சி : அப்செட்டில் நிர்வாகிகள் : வேட்பாளர் விரைவில் அறிவிப்பு!

புதுச்சேரி தொகுதியில் பாஜக போட்டியிட என்ஆர் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க பாஜக நிர்வாகிகள் கோரியதை அடுத்து முதலமைச்சர் ரங்கசாமி சம்மதம் தெரிவித்தார். மேலும், புதுச்சேரி மக்களுக்கு நன்கு அறிமுகமான நபரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று பாஜகவுக்கு முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், புதுவை மக்களவை தொகுதியை பாஜ போட்டியிட முதல்வர் ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால், புதுவை தொகுதியில் பாஜக சார்பில் அமைச்சர் நமச்சிவாயத்தை நிறுத்த தலைமை முடிவு செய்ததாகவும், ஆனால், அவர் போட்டியிட தயக்கம் காட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக புதுச்சேரி மக்களுக்கு நன்கு அறிமுகமான நபரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ஆர் காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது. பாஜக சார்பில் போட்டியிட நியமன எம்எல்ஏ ராமலிங்கம், ஜி.என்.எஸ்.ராஜசேகரன் மற்றும் பாஜக மாநில தலைவர் செல்வகணபதி உள்ளிட்டோர் பெயர் பரிசீலினையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 836

    0

    0