குட்டியை தூங்க வைக்கும் தாய் யானை… அரவணைத்து உறங்கும் அழகான க்யூட் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2024, 1:59 pm

குட்டியை தூங்க வைக்கும் தாய் யானை… அரவணைத்து உறங்கும் அழகான க்யூட் வீடியோ!!

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சிறுகுன்றா பகுதியில் தேயிலை தோட்டத்தின் அருகாமையில் தன்னுடைய குட்டி யானையை சுகமாக தூங்க வைத்து பாதுகாப்பாக பார்த்த தாய் யானை சுற்றுலாப் பயணிகள் வியக்கும் வகையில் செல்பி போட்டோ எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

தற்போது ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளின் யானைகளின் புகலிடமாக வால்பாறை காணப்படுகிறது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி குழுவாக பிரிந்து இன்று சிறுகுன்றா பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்குள்ள ஓடையில் சேற்றுடன் தண்ணீரை எடுத்து மேலே ஊற்றிக் கொண்டு இருந்த பொழுது அதன் தாயின் உடைய நிழலில் படுத்து உறங்கிய குட்டியை தாய் யானை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டிருந்த காட்சி மிகவும் பிரமிக்க வைத்தது.

வால்பாறை பகுதியில் அதிக அளவில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் யானையின் வழித்தடத்தில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நிறுத்தி அதன் பாதையை மறிப்பதால் கோபம் கொண்டு அப்பகுதியில் உள்ள சுற்றுலா பகுதிகளை விரட்டக்கூடிய ஒரு நிலையும் ஏற்படுகிறது.

இதனை வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விரட்டப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?