ஸ்ருதிகாவின் அம்மா தற்கொலை முயற்சி… போலீசில் பரபரப்பு புகார் – விழி பிதுங்க வைக்கும் சம்பவம்!
Author: Rajesh4 February 2024, 10:19 pm
தமிழ் சினிமாவில் பெரிதாக பிரபலமாகாத நடிகையாக இருந்து பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதிகா. இவர் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். 2002ஆம் ஆண்டு வெளியான சூர்யாவின் ஸ்ரீ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அந்தப்படம் அட்டர் பிளாப் ஆகி பெரிதாக பேசப்படவில்லை.
அடுத்தடுத்து தமிழில் ஆல்பம், நள தமயந்தி, தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்தார். இதனிடையே ஸ்ருதிகா அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். இதையடுத்து கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று பெருமளவில் பிரபலமானார்.
இந்நிலையில் ஸ்ருதிகா தனது அம்மாவுடன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பல விஷயங்கள் குறித்துப்பேசினார். அப்போது ஸ்ருதிகாவின் அம்மா தனது காதல் கதை குறித்து பகிர்ந்துக்கொண்டார். “உன்னுடைய காதல் எல்லாம் என்ன பெரிய காதல்? நானும் உங்க அப்பாவும் காதலிச்ச நேரத்துல எவ்வளவு பரபரப்பான விஷயங்கள் நடந்துச்சு தெரியுமா?
நானும் அவரும் காதலித்து பெற்றோர் சம்மதம் இல்லாததால் ஓடிப்போய் திருமணம் செய்துக்கொண்டோம். அப்போது அவருக்கு 19 வயசு தான் ஆனால், எனக்கு 23 வயது. வயசில் அவரை விட 4 வயசு பெரியவள் என்பதால் நான் உங்க அப்பாவை கடத்திச்சென்றுவிட்டேன் என பத்திரிகைகளில் செய்தி வெளியாகியது. அதை பார்த்ததும் கடலில் விழுந்து செத்துபோய்டலாம்னு முடிவெடுத்தேன்.
உடனே போலீஸ் எங்களை பிடித்து நீ அவரை கடத்தி சென்றாயா? என கேட்டார்கள். அதை அவரிடமே கேளுங்கள் என்றதும் உன் அப்பா நாங்கள் இருவரும் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்துக்கொண்டோம் என கூறினார். அதன் பின்னர் தான் எங்களை துரத்துவதை நிறுத்தினார்கள் என்றார் ஸ்ருதிகாவின் அம்மா.