இபிஎஸ் வருகைக்காக வைக்கப்பட்ட பேனர்கள் கிழிப்பு… அரூரில் பரபரப்பு… நடவடிக்கை எடுக்க அதிமுகவினர் கோரிக்கை..!!!

Author: Babu Lakshmanan
5 February 2024, 9:43 am

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அரூர் வருகையால் ஆங்காங்கே வைக்கப்பட்ட பேனர்களை மர்ம நபர்கள் கிழித்துச்சென்றதால் பரபரப்பு நிலவியது.

தர்மபுரி மாவட்டம் அரூரில் கொங்கு பல்நோக்கு பண்பு பயிற்சி கட்டிடம் கட்டப்பட்டு, இந்த கட்டிடத்தை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி இன்று திறந்து வைக்க உள்ளார். மேலும், இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி தங்கமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் இவர்களை வரவேற்கும் விதமாக அதிமுக சார்பில் அரூர் நகர் பகுதிகளிலும் நாச்சனாம்பட்டி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் கட்சி பேனர்கள் மற்றும் கொங்கு மக்கள் சார்பில் போனர்கள் கட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அரூர் காவல் நிலையம், ரவுண்டானா, திரு வி க நகர், சின்னாங்குப்பம், நாச்சினாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அதிமுக சார்பில் வைக்கப்பட்ட விளம்பர பேனர்களை மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டு உள்ளன. எடப்பாடி கே பழனிசாமி அரூர் வருகையால் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவினர் வலியுறுத்தியுள்ளனர்.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?