ஒரே இந்தியானு சொல்றீங்க..உபிக்கு ரூ.2.73.. தமிழகம் மீது மட்டும் ஏன் வஞ்சனை? நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா காரசாரம்!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2024, 4:51 pm

ஒரே இந்தியானு சொல்றீங்க..உபிக்கு ரூ.2.73.. தமிழகம் மீது மட்டும் ஏன் வஞ்சனை? நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா காரசாரம்!

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜன.31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையாற்றினார். தொடர்ந்து கடந்த பிப். 1ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இப்போது குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்து வருகிறது. அதில் பேசிய திருச்சி சிவா, “நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்வேறு மாநிலங்களில் அவர் நியமித்த ஆளுநர்களைப் போல இல்லாமல், அரசின் உரையை எந்தவொரு மாற்றமும் இல்லாமல் அப்படியே வாசித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மதச்சார்பின்மைக்கு எதிரானது. ஏழைகளுக்கு எதிரானது. பெண்களுக்கு எதிரானது. சிறு குறு தொழில் செய்வோருக்கு எதிரானது. காப்ரேட்களுக்கு ஆதரவானது.

விவசாயிகளுக்கும் தொழிலாளர்களும் எதிரானது. மாநிலங்களுக்கு எதிராகவே இருக்கிறது. இதை எல்லாம் சொல்வதால் நான் மத்திய அரசு மீது ஆதாரமற்ற தேவையில்லாத குற்றச்சாடுகளைச் சுமத்துகிறேன் என்று பொருள் இல்லை.

இந்த அரசு மத்தியில் ஆட்சியை அமைத்த பிறகு, மாநிலக் கட்சிகளையும் உள்ளூர் பிரச்சினைகளையும் அழிக்க அப்பட்டமான முயற்சி நடக்கிறது. மாற்றான் தாய் மனப்பான்மை உடன் தான் நடத்துகிறார்கள்.

நிதி பகிர்வை எடுத்துக் கொள்ளுங்கள். நிதி ஆணையத்தின் பரிந்துரையைக் காட்டிலும் குறைந்த அளவே நிதியைத் தருகிறார்கள். முதலில் 34%ஆக இருந்து பிறகு 31.3%ஆக குறைத்தார்கள். இப்போது அது மேலும் குறைந்து 25%ஆக இருக்கிறது. மாநிலங்களுக்குத் தரப்படும் நிதியைக் குறைத்துக் கொண்டே வருகிறார்கள்.

நேரடி வரி வசூலில் தமிழகம் தான் இந்த நாட்டிற்கு அதிக பங்களிப்பைத் தருகிறது. நாங்கள் மத்திய அரசுக்குத் தரும் ஒரு ரூபாய் வரியில் தமிழ்நாட்டிற்கு 29 பைசா மட்டுமே திரும்ப வழங்கப்படுகிறது. அதேநேரம் உத்தரப் பிரதேசம் ஒரு ரூபாய் வழங்கினால் அவர்களுக்கு 2 ரூபாய் 73 பைசா வழங்கப்படுகிறது. ஏன் இந்த ஏற்றத்தாழ்வு.. எதற்காகத் தமிழ்நாட்டிற்கு இந்த அநீதி.

அனைத்து மாநிலங்களும் ஒன்று எனச் சொல்கிறார்கள்.. பிறகு ஏன் இந்த ஏற்றத்தாழ்வு.. ஜிஎஸ்டி வரி முறையால் தமிழகத்திற்கு மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அவசர அவசரமாக ஜிஎஸ்டி முறையை அமல்படுத்தியதே இதற்குக் காரணம் என திருச்சி சிவா புள்ளி விபரங்களுடன் பேசியது நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கவனத்தை பெற்றது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…