அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த 4ஆம் வகுப்பு மாணவிகள்.. விசாரித்ததில் அதிர்ச்சி : தலைமை ஆசிரியரின் வெறிச்செயல்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2024, 8:33 pm

அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த 4ஆம் வகுப்பு மாணவிகள்.. விசாரித்ததில் அதிர்ச்சி : தலைமை ஆசிரியரின் வெறிச்செயல்!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கோவிந்தாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் அக்கிரமத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் தூத்துக்குடி அருகே மறவன்மடம் பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் குருராஜ் என்பவர் மகன் ஜான்சன்(58) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் ஜான்சன் அப்பள்ளியில் படிக்கும் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதை அடுத்து கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தலைமை ஆசிரியர் ஜான்சன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

மேலும் இவர் மீது விளாத்திகுளம் பகுதியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததை அடுத்து கோவிந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!