‘உ.பி கழிசடைங்க… பொய்யை மட்டும் தான் பேசுவீங்களாடா?’… விஜய் அரசியல் விவகாரம் ; திமுகவினரை விளாசிய கஸ்தூரி…!!!

Author: Babu Lakshmanan
6 February 2024, 10:18 am

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்ததற்கு அநாகரீகமான முறையில் விமர்சித்த நபருக்கு நடிகை கஸ்தூரி கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த 2ம் தேதி தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை தொடங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்த அவர், 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை நோக்கி செயல்பட இருப்பதாகவும் கூறினார்.

மேலும், தான் ஒப்பந்தம் செய்த படங்களை நடித்து முடித்துக் கொடுத்து விட்டு, இனி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு தரப்பினரும் வரவேற்பையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், சமூக ஆர்வலரும், நடிகையுமான கஸ்தூரி நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து கருத்து தெரிவித்திருந்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், தளபதி விஜய் அவர்களுடைய அரசியல் வருகை எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும், காவி கொள்கை உள்ளவர்கள் பாஜகவிற்கு தான் ஓட்டு போடுவார்கள், அவர்கள் ஜோசப் விஜய்க்கு ஓட்டு போட மாட்டார்கள் என்றும் கூறினார். அதேபோல மைனாரிட்டி மக்கள் திமுகவுக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்று சில விஷயங்களை பேசி இருந்தார். இதில் அவர் ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக X தளவாசி ஒருவர் அவருடைய அந்த கருத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார். ஜோசப் விஜய் என்றா சொல்வது… உனக்கெல்லாம் மதத்தை தவிர்த்து வேறு எதுவும் தெரியாதா..? என்று அவர் அநாகரீக வார்த்தைகளுடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் பேசியிருந்த கஸ்தூரி அவர்கள் “விஜய்யை ஜோஸப் என குறிப்பிடும் கட்சியினர் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற அரசியல் உண்மையை சொல்லியிருக்கேன். என் சொந்த கருத்தை அல்ல. திமுக கூட்டணிக்கு பாதிப்புன்னு சொன்ன உடனே உ.பி கழிசடைங்க எப்படியெல்லாம் மூட்டி விடுதுங்க பாரேன். பொய்யை மட்டும் தான் பேசுவீங்களாடா?” என்று கூறியுள்ளார்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?