விவாகரத்தும் பண்ணல… வீட்டை விட்டும் போகல – வதந்திக்கு வாய்ப்பூட்டு போட்ட நட்சத்திர நடிகை!

Author: Rajesh
6 February 2024, 3:48 pm

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையும் உலக சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி என பலரும் பட்டம் பெற்றாலும் இன்றும் ‘உலக அழகி’ என சொன்னால் முதலில் நமது நியாபகத்துக்கு வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.

குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு எவ்வளவோ நல்ல பேவரைட் ஹீரோயின்ஸ் இருந்தாலும், கனவு கன்னியாக இன்னும் மனதில் நிலைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், குரு, எந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரானா அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதியா பச்சன் என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் இவர்களின் 16 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வரவுள்ளதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் அபிஷேக் பச்சன் திடீரென திருமண மோதிரத்தை கழட்டி வீசியுள்ளார். இதையடுத்து ஐஸ்வர்யா ராய் உடன் அவருக்கு ஏதேனும் மனக்கசப்பா? விரைவில் இவர்கள் விவாகரத்து செய்யப்போகிறார்களா? என்றெல்லாம் சமூகவலைத்தளத்தில் விவாதம் நடைபெற்று வந்தது.

aishwarya rai-updatenews360

இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை ஐஸ்வர்யா ராய் திடீரென கணவரின் சிறு வயது புகைப்படம் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார். இதன் மூலம் ஐஸ்வர்யா ராய் விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 355

    0

    0