பிரச்னை இருந்தாலும் பாசம் குறையல.. மனைவியின் பட ரிலீஸூக்கு வாழ்த்து சொன்ன தனுஷ்..!
Author: Vignesh6 February 2024, 6:54 pm
கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.
இதனிடையே தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.
பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய அணுகவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தனுஷ்சை பிரிந்த பின் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா தன் அப்பா ரஜினிகாந்த்தை வைத்து லால்சலாம் படத்தை இயக்கி உள்ளார்.
இந்நிலையில், பிரிந்து வாழ்ந்து வந்தாலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே ஒரு விஷயத்தில் போட்டு இருந்து கொண்டே தான் இருக்கிறது. அவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயன்றுவருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றதை அடுத்து, படம் வருகிற ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளது. மேலும், இப்படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்நிலையில், தன் முன்னாள் மனைவி இயக்கத்தில் வெளியான லால் சாலம் படத்தின் டிரைலரை பார்த்து நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ஆனால், ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் எப்போதும் போல் அவரது தலைவர் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து கூறியிருக்கிறார். படக் குழுவினருக்கு வாழ்த்து என்று கூறி சூப்பர் ஸ்டார் தலைவா என்ற டேக்கையும் பதிவிட்டு எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தநிலையில், ஐஸ்வர்யா பெயரை குறிப்பிடாமல் இருந்தது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
Lal salaam trailer https://t.co/jUlBWLLtTX Best wishes to the team. God bless. #superstar #thalaivar
— Dhanush (@dhanushkraja) February 5, 2024