மொட்டை மாடியில் திருட்டுத்தனமாக கில்பான்ஸ்.. கூச்சமின்றி கூறிய ஸ்ருதி ஹாசன்..!
Author: Vignesh7 February 2024, 10:57 am
கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.
அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்.
அவ்வப்போது, காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்துவார்.தொடர்ந்து கிடைக்கும் படங்களில் நடித்து வருவதோடு எப்போதும் சமூகவலைத்தளங்களில் செம ஆக்டீவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், தன்னுடைய காதலன் சாந்தனுவுடன் தனி வீட்டில் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில், அளித்த பேட்டி ஒன்றில், சென்னையில் திருட்டுத்தனமாக எங்கேயாவது சென்று இருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த அவர், என்னோட முதல் காதலர் வீட்டின் மொட்டை மாடிக்கு தான் அதுவும் கில்பான்ஸ்காக, நடந்தது என்று சிரித்தபடி கூச்சமின்றி கூறியுள்ளார்.