பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. கதவுகள் திறந்தே இருக்கும் என கூறிய அமித்ஷா கருத்துக்கு ஆர்எஸ் பாரதி விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2024, 2:21 pm

பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. கதவுகள் திறந்தே இருக்கும் என கூறிய அமித்ஷா கருத்துக்கு ஆர்எஸ் பாரதி விமர்சனம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில், பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணி நடைபெற்று வருவதாகவும், இறுதி செய்யபடவில்லை என்றும் கூறினார்.

மேலும் அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,கூட்டணிக்கான பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கிறது என்று கூறினார். அதிமுக கூட்டணி கூறித்து அமித்ஷா பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமித்ஷாவின் கருத்து குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என கூறியுள்ளார்.

திமுக அணி பலமாக இருப்பதால் கூட்டணி அமைக்க பார்க்கிறார்கள். பாமவுடன் அதிமுக பேசியிருப்பதே அவர்களின் பலவீனத்தை காட்டுகிறது என்றம் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 273

    0

    0