அடுக்குமாடி குடியிருப்பில் சோகம்.. செப்டிங் டேங் சுத்தம் செய்யும் போது மூச்சுத்திணறி ஒப்பந்ததாரர் பலி..!!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2024, 10:19 am

அடுக்குமாடி குடியிருப்பில் சோகம்.. செப்டிங் டேங் சுத்தம் செய்யும் போது மூச்சுத்திணறி ஒப்பந்ததாரர் பலி..!!

கோவை உடையம்பாளையம் பகுதியில் அஸ்வின் அடுக்குமாடி குடியிருப்பு என்ற தனியார் குடியிருப்பு உள்ளது. இன்று அந்த குடியிருப்பில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணிக்காக குணா, ராம் ஆகிய 2 தொழிலாளிகளை மோகனசுந்தரலிங்கம் என்ற ஒப்பந்ததாரர் அழைத்து சென்றுள்ளார். அப்போது தொழிலாளர்கள் இருவரும், மூச்சுத்திணறுவதாக கூறியுள்ளனர்.

அப்போது இருவரையும் காப்பற்ற முயன்ற மோகனசுந்தரலிங்கம், மூச்சுத்திணறி செப்டிக் டேங்க்கில் விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த பீளமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். இச்சம்பவத்தில் தொழிலாளர்கள் இருவரும் நலமுடன் உள்ளனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?