எம்ஜிஆர் முகத்தை வைத்து தான் திமுக ஆட்சிக்கே வந்தது : ஆ. ராசாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2024, 1:43 pm

எம்ஜிஆர் முகத்தை வைத்து தான் திமுக ஆட்சிக்கே வந்தது : ஆ. ராசாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் ஆவேசம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்-ஐ அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசாவைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக தான். இந்த 30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தான் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்தது.

எம்ஜிஆர் முகத்தை வைத்துதான் திமுக ஆட்சிக்கு வந்தது. எம்ஜிஆர்-ன் முகம் காட்டித் தான் 1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. கண்னுக்கு காற்றில் கூட ஊழல் செய்த ஆ.ராசாவுக்கு எம்ஜிஆர் பற்றி பேச தகுதி இல்லை. திமுகவை வேரோடு அழிக்க வேண்டும் என எம்ஜிஆர் கூறியது தற்போது நடக்கிறது. அதிமுகவினர் வெகுண்டெழுந்தால் ஆ.ராசாவால் தாங்க முடியுமா? என்றார்.

எம்ஜிஆர் பற்றி அவதூறு பேசிய ஆ.ராசாவுக்கு நாவடக்கம் தேவை. அவதூறு பேசுவதை தவிர்த்து ஆ.ராசா நல்லதை மட்டும் பேச வேண்டும் என தெரிவித்தார். மேலும், அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது. மக்களின் 50 ஆண்டுகால போராட்டத்திற்கு மதிப்பளித்து அதிமுகவின் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை திமுக கிடப்பில் போட்டது என குற்றச்சாட்டை முன்வைத்தார்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!