திடீரென சர்ச்சுக்கு சென்ற அண்ணாமலை… சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்த சர்ச் நிர்வாகம்…!!!!

Author: Babu Lakshmanan
9 February 2024, 2:20 pm

‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் ஒரு பகுதியாக பா.ஜ.க, மாநில தலைவர் அண்ணாமலை திருத்தணியில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை செய்தார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அண்ணாமலை 2வது கட்டமாக என் மண் என் மக்கள்’யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மக்களிடம் இந்த யாத்திரை நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மேளதாளங்கள் முழங்க, நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளுடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருத்தணியில் யாத்திரை மேற்கொண்ட அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த யாத்திரையில் பா.ஜ., மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் உள்பட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர். அரக்கோணம் சாலை ம.பொ.சி சாலை வழியாக திருத்தணி நகராட்சி அலுவலகம் அருகே யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை, அங்கிருந்த பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, பா.ஜகவினர் முருகன் கோயிலில் பூஜைகள் செய்யப்பட்ட வெள்ளி வேலை அண்ணாமலைக்கு காணிக்கையாக வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து அவர் திருத்தணி சி.எஸ்.ஐ., தூய மாதா மத்தேயு தேவாலயத்தில் பிரார்த்தனை செய்தார். அவருக்கு சர்ச் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் அண்ணாமலை தர்மபுரி சென்ற போது அங்குள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை செய்ய சென்ற போது, சிலர் அவரை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், திருத்தணியில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நெற்றியில் திருநீறு பூசியவாறு சென்ற அண்ணாமலை, பா.ஜ.க. மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் ஆகியோர் மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக பிரார்த்தனை மேற்கொண்டனர்.

பிற மத வழிபாட்டுத்தலங்களில் பா.ஜ.,வினர் நுழையக்கூடாது என்று எதிர்ப்பு எழுந்த நிலையில், “அனைத்து மதமும் சமம் என்ற நோக்கில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் அண்ணாமலை சென்று பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…