அப்பவே பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்ட MGR.. எந்தெந்த மூவிஸ் தெரியுமா?..

Author: Vignesh
10 February 2024, 10:55 am

தென்னிந்திய திரைத்துறையில் அசைக்க முடியாத நட்சத்திரமாக பிரகாசித்தவர். தமிழக அரசியலில் எவராலும் மறக்க முடியாத புரட்சித் தலைவராக விளங்கியவர் எம்ஜிஆர். இந்த பெயருக்கு ஒரு அறிமுகம் தேவையா என்ன? இப்போது உள்ள குழந்தைகளுக்கு கூட கண்டிப்பாக இவரை தெரிந்து இருக்கும்.

MGR

திரையிலும், அரசியலிலும் மக்கள் செல்வாக்குடன் திகழ்ந்த எம்ஜிஆர் 1936-ல் சதிலீலாவதி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானவர். இவர் 1978-யில் வெளியான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை 136 திரைப்படங்களில் நடித்துள்ளார். 136 திரைப்படங்களில் சுமாராக 114 திரைப்படங்களில் எம்ஜிஆர் நாயகனாகவே நடித்துள்ளார். எம்ஜிஆருக்கு 1958 இல் வெளியான நாடோடி மன்னனுக்குப் பிறகு அவரது படங்களில் தனி கவனம் பெற ஆரம்பித்தது.

MGR

மக்கள் மத்தியில் தனி கவனம் பெற ஆரம்பித்தது. சரி இப்போது சொல்ல வரும் விஷயம் என்னவென்றால், டாப் நடிகரின் படங்கள் சென்னையில் எவ்வளவு வசூலித்தது என்பதை பார்த்து வரும் நிலையில், அந்த காலத்தில் எம்ஜிஆர் நடித்த எந்தெந்த படங்கள் வசூல் சாதனை செய்து என்பதை இந்த பதிவில் காண்போம்.

MGR

சென்னையில் அதிக வசூல் சாதனை செய்த எம்ஜிஆரின் படங்கள்,

எங்க வீட்டுப் பிள்ளை (1965)
அடிமைப் பெண் (1969)
மாட்டுக்கார வேலன் (1970)
ரிஷாக்காரன் (1971)
உலகம் சுற்றும் வாலிபன் (1973)
இதயக்கனி (1975)
மீனவ நண்பன் (1977)
இன்று போல் என்றும் வாழ்க (1977) ஆகியவை வசூல் சாதனை படைத்த படங்கள்.

  • Actor Kavin Tortured Producers அடுத்த விஜய் நான்தான்.. முழுசா சந்திரமுகியாக மாறிய இளம் நடிகர்.. தயாரிப்பாளர்களிடம் கறார்!