ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை… உயிரை பிடித்து ஓடிய மக்கள் : நொடியில் நடந்த மரணம் : ஷாக் சிசிடிவி காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2024, 2:28 pm

ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை… உயிரை பிடித்து ஓடிய மக்கள் : நொடியில் நடந்த மரணம் : ஷாக் சிசிடிவி காட்சி!

வயநாடு அருகிலுள்ள மணந்தவாடி குடியிருப்பு பகுதிக்குள் மக்னா யானை நுழைந்தது. அதிகாலையில் ரோட்டில் நடந்து கொண்டிருந்த யானையை பார்த்ததுமே, பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். அந்த யானை எல்லா தெருக்களுக்கும் சென்றது..

ஒரு தெருவுக்குள் நுழைந்தபோது, அஜி என்ற நபர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்தனர். திடீர்னு யானையை பார்த்ததுமே அதிர்ச்சி அடைந்துவிட்டனர். அதனால், அங்கிருந்த ஒரு வீட்டின் காம்பவுண்ட் ஏறி உள்ளே குதித்து தப்பிக்க முயன்றார்கள். அப்போது அஜி என்பவர் தவறி கீழே விழுந்தார். அதற்குள் கேட்டை உடைத்து கொண்டு வந்த யானை சுவர் ஏறி குதித்த அஜியை மிதித்தே கொன்றது. அவர் தவறி விழாமல் இருந்தால் உயிர் தப்பியிருக்கலாம்.

உயிரிழந்த அஜி என்பவருக்கு 42 வயதாகிறது.. இவர் ஒரு டிராக்டர் டிரைவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலறிந்து வனத்துறையினர் விரைந்து வந்து பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறார்கள்.. அந்த பகுதி முழுவதுமே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..

ஆனால் பொதுமக்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள்.. இந்த மக்னா யானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டிருந்தும்கூட, வனத்துறையினர் எப்படி அசால்ட்டாக விட்டுவிட்டார்கள்? முறையாக கண்காணிக்க தவறிவிட்டார்களே? என்று பொதுமக்கள் ஆவேசமாக குற்றம்சாட்டுகிறார்கள்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 389

    0

    0