யாரு சொன்னது தளபதி 69 தான் கடைசி படம்னு ? சான்ஸே இல்ல – விஷயத்தை கேளுங்க!

Author: Rajesh
10 February 2024, 2:42 pm

சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.

அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

அண்மையில் “தமிழக வெற்றி கழகம் என்னும் புதிய கட்சியைத் தொடங்கி அதன் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் நடிகர் விஜய். மிக விரைவில் முழுநேர அரசியலிலும் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது நடித்து வரும் GOAT திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. அது தான் விஜய்யின் கடைசி திரைப்படம் என்றும் சொல்லப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவலின்படி விஜய் தீவிர அரசியலில் களமிறங்கினாலும் இரண்டு படங்களில் அவரது நடிப்பை நிச்சயம் பார்க்கலாம் என தகவல்கள் கூறுகிறது. அதாவது, கைதி 2 மற்றும் லியோ 2 படத்தில் கேமியோ ரோலில் நிச்சயம் விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் விஜய்யின் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 406

    0

    0