அண்ணாமலை செய்யும் விளம்பர அரசியல் தமிழகத்தில் எடுபடாது : அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு காட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2024, 5:57 pm

அண்ணாமலை செய்யும் விளம்பர அரசியல் தமிழகத்தில் எடுபடாது : அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு காட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாமணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சி நகர் 4வது தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட வாறுகால் மற்றும் பேவர் பிளாக் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட பிஜேபி விவசாய அணி பிரிவு பொருளாளர் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் தமிழகத்திற்காக என்ன சாதனைகளை செய்தார்கள் பட்டியலிட அண்ணாமலை தயாரா? பாஜக தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளை இதுவரை ஒன்று கூட தீர்க்கப்படவில்லை.

கச்சத்தீவு, காவேரி,முல்லைப் பெரியாறு, நிரந்தர தீர்வு காண்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார்கள் அதை இதுவரை தீர்வு காணவில்லை

தமிழகத்தில் எய்ம்ஸ் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்று அடிக்கல் நாட்டப்பட்டதாக இருக்கிறது . பல மாநிலங்களில் அடிக்கல் நாட்டப்பட்டு கல்லூரி அமைக்கப்பட்டு விட்டது.

நீட் தேர்வுக்கு மத்திய அரசு தற்போது வரை விளக்கு அளிக்கவில்லை . என்.எல்.சி நிலம் எடுப்பு தொடர்பாக மத்திய அரசு பாராமுகம் காட்டியுள்ளது இது போன்ற பிரச்சினைகளை அண்ணாமலை பேசினால் நன்றாக இருக்கும்

விளம்பர அரசியலை அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார். அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை அந்த விளம்பரம் தமிழகத்தில் எடுபடாது

அதே போல் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்த காலத்தில் இந்திரா காந்தி கருணாநிதி கட்ச தீவை இலங்கைக்கு தாரை வார்த்தனர். தேசியக் கட்சிகள் அனைத்தும் தமிழர் நலனுக்கு எதிராகவே உள்ளன

தேசிய கட்சிகளால் எந்த நலனும் இல்லை என்ற அம்மாவின் முடிவையே இ.பி.எஸ் தற்போது எடுத்துள்ளார். தன்னிச்சையாக போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்று யார் பிரதமராக வருவார் என்பதை அதிமுக தான் நிர்ணயம் செய்யும்.

பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் கொள்கை வேறுபாடு உள்ளது. அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, பற்றி எல்லாம் அண்ணாமலை விமர்சிக்கிறார். அதையெல்லாம் ஓபிஎஸ் கேட்கவில்லை ஒருவேளை அண்ணாவையும் எம்ஜிஆரையும் அம்மாவையும் விமர்சித்ததை ஓபிஎஸ் ஏற்றுக் கொள்கிறாரா

அதிமுக கூட்டணிக்கு நிறைய கட்சிகள் வர உள்ளன திமுக கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பித்து ஒரு மாத காலம் ஆகிவிட்டது ஆனால் தற்போது வரை உடன்பாடு எட்டப்படவில்லை இழுபறி நீடிக்கிறது.

அனைத்து கூட்டணி கட்சிப்புகளையும் திருப்திப்படுத்துவது என்று இயலாத காரியம். நாங்கள் தற்போது தான் பேச்சுவார்த்தை துவங்கி உள்ளோம் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே வேகம் எடுக்கும் அந்த நடைமுறையை தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம்

விரைவில் நீங்கள் எதிர்பார்க்காத மெகா கூட்டணி அதிமுக தலைமையில் உருவாகும் 39 தொகுதிகளும் வெற்றியை பெறுகிற கூட்டணியாக அதிமுக இருக்கும் என தெரிவித்தார்.

  • ajith fans released poster on ilaiyaraaja compensation on good bad ugly viral on internet இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…