எவன் செத்தால் எனக்கென்ன என நினைக்கும் திமிர் பிடித்த மோடி… தமிழனை தொட்டவன் கெட்டுவிடுவான் : ஆர்எஸ் பாரதி!!!
Author: Babu Lakshmanan11 February 2024, 4:43 pm
எவன் செத்தால் எனக்கென்ன என நினைக்கும் திமிர் பிடித்த மோடி… தமிழனை தொட்டவன் கெட்டுவிடுவான் : ஆர்எஸ் பாரதி!!!
படகோட்டி என படம் எடுத்ததால் நம்மால் என்று நினைத்து ஏமாந்தீர்கள் என்றும், ரொம்ப நாளைக்கு யாரும் ஏமாற்ற முடியாது என்று மறைமுகமாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை எம்ஜிஆரை சாடினார்.
தமிழக மீனவர்களை இலங்கை அரசு தொடர்ச்சியாக கைது செய்வது, அவருடைய படகுகளை பறிமுதல் செய்வது உள்ளிட்டவை தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து மத்திய அரசு எந்த ஒரு குரலும் கொடுக்கவில்லை எனக் கூறி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திமுக கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் பேசிய போது :- ராமேஸ்வரத்திற்கு ஒரு பத்து நாளைக்கு முன்பு வந்து வேஷம் போட்டு விட்டு சென்றார். கோயிலை சுற்றிவிட்டு வந்தால் இந்த மக்கள் ஏமாந்து விடுவார்களா? அது மட்டும் இல்ல நிர்மலா சீதாராமன் சொல்லுகிறார் திமுக இந்துக்களுக்கு எல்லாம் விரோதி என்று நான் மோடிக்கு சொல்கிறேன். நிர்மலா சீதாராமனுக்கு சொல்கிறேன், இந்துக்கள் வாழ்கிற ராமேஸ்வரத்தில் ராமநாதபுரம் தொகுதியில் இந்துக்கள் வாழ்கின்ற புண்ணியதளமாக இருக்கின்ற ராமேஸ்வரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்ந்த முத்துராமலிங்கம் தான் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த திருத்தலம் இருக்கிற இடத்திலே திமுகவிற்கு தான் ஓட்டு என்று இந்து மக்களே முடிவு எடுத்து விட்டார்கள். இதைவிட ஒரு பதிலை நிர்மலா சீதாராமனுக்கு சொல்ல விரும்பவில்லை, நாங்கள் கேட்பதெல்லாம் எங்களுக்கு ஒரு இழுக்கு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியிலே உடனடியாக படகுகளும், மீனவர்களும் விடுதலை செய்தார்கள். ஏனென்றால் தலைவர் கலைஞர் அவர்கள் குரல் கொடுத்தால் அதற்கு பயந்தார்கள். ஆனால் இந்த மோடி, திமிர் பிடித்த மோடி, தமிழ்நாடு பத்தியே கவலைப்படாத மோடி, தமிழன் எவன் செத்தால் எனக்கென்ன இன்னும் பத்து வருஷம் ஆனாலும் அதை பற்றி கவலை இல்லை. ஆணவத்துடன் அகம்பாவத்துடன் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.
இதே இலங்கையுடன் மோடிக்கு என்னென்ன தொடர்பு இருக்கிறது என்று தெரியாதா..? 2014 ஆம் ஆண்டு பிட்ஜோ என்ற ஒரு மீனவனை இலங்கை அரசு சுட்டு கொன்றது. இலங்கை அரசு மீனவர்களுக்கு செய்த பாவம்தான் பிச்சைக்கார நாடாக ஆகிவிட்டது. எந்த தமிழனை தொட்டாலும் எவன் தமிழனை தொட்டாலும் அவன் கெட்டுவிடுவான். அதற்கு எடுத்துக்காட்டாக தான் இலங்கை அரசு உள்ளது.
நம்மை சுட்டவனுக்கு, நம்மை கொல்லுபவனுக்கு இந்த மோடி 34 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நமக்கு நமது மீனவர்களுக்கு நிவாரணம் கொடுக்க கேட்டால் இல்லை என்று மறுக்கிறார். ஆனால் இலங்கைக்கு நம்மள சாகடிப்பவனுக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து உதவுகிறார் என்றால் அது நியாயம் தானா..? என்று திமுக சார்பில் எழுப்பப்படுகின்ற குரலுக்கு எந்த ஒரு பதிலும் மோடியால்தர முடியவில்லை.
மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் மீனவர்களுக்கு என்று ஒரு மாநாட்டை கடந்த 2023 ஆம் ஆண்டு நடத்தினார். தமிழ்நாட்டில் சில பேர் மீனவர் நண்பனாக படத்தில் நடித்தார்கள். அவர்கள் கூட மாநாட்டை நடத்தவில்லை படகோட்டி என படம் போட்டு காட்டினார்கள். மீனவர்கள் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. படகோட்டி என படம் எடுத்ததால் நம்மால் என்று நினைத்து ஏமாந்தீர்கள், ரொம்ப நாளைக்கு யாரும் ஏமாற்ற முடியாது என்பதற்கு இந்த கூட்டமே எடுத்துக்காட்டு. உண்மையிலேயே மீனவர் என்று சொன்னால் அந்த பட்டத்திற்கு உரியவர் மு.க.ஸ்டாலின், அவர்கள் தான் என பேசினார்.