எந்திரன் படத்தின் முதல் சாய்ஸ் ரஜினி இல்லை.. அந்த காரணத்தினால் நடிக்காமல் போன பிரபலம்..!
Author: Vignesh12 February 2024, 1:10 pm
இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் நம்ம ஊரு இயக்குனர் ஷங்கர். அவரது படங்களில் சமூகத்தின் மேல் இருக்கும் அவரின் கோபத்தின் வெளிப்பாடு நம்மளை பயமுறுத்த வைக்கும். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
பிரம்மாண்ட படம்களுக்கு விதை போட்ட இயக்குனர் ஷங்கரின் பாதைதான் இன்று பல இயக்குனர்கள் Follow செய்யும் Method. ஆனால், பாகுபலி மற்றும் பாகுபலி 2, RRR,KGF 2, புஷ்பா படங்களின் வெற்றிக்குப் பிறகு வேறு மாநில இயக்குனர்கள் பக்கம் சென்றுவிட்டது. ஷங்கர் இயக்கிய ‘2.0’ படம் நல்ல வசூல் பெற்றாலும் ‘பாகுபலி’ வசூலை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
இந்தநிலையில், இந்தியன் படத்திற்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். தற்போது, பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் படைப்புகளில் ஒன்றான எந்திரன். இந்த படம் குறித்து தமிழ் சினிமாவே பெருமிதம் கொள்ளும் அளவிற்கு எந்திரன் படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் சங்கர். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் சிட்டி ரோபோவாக காட்டிய விதம் அசத்தலாக இருந்தது.
ஹாலிவுட்டிலிருந்து சயின்டிபிக் திரைப்படங்கள் வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவிலும் அப்படி ஒரு படம் பண்ண முடியும் என காட்டியவர் இயக்குனர் ஷங்கர். அதேபோல், இன்று வரை ரஜினியின் திரை வாழ்க்கையில் டாப் 5 திரைப்படங்கள் என லிஸ்டை எடுத்துப் பார்த்தால் அதில், எந்திரன் திரைப்படம் இடம்பெற்று இருக்கும்.
அந்த வகையில், எந்திரன் திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்க இருந்தது ரஜினி கிடையாதாம். இந்த கதையை முதன் முதலில் இயக்குனர் சங்கர் பாலிவுட் கிங் கான் நடிகர் ஷாருக்கானிடம்தான் கூறியுள்ளார். ஷாருக்கானுக்கு கதை பிடித்து போக இருவரும் இணைந்து படம் பண்ணலாம் எனக் கூறியுள்ளனர்.
இப்படத்தில், பிரியங்கா சோப்ராவை தான் கதாநாயகியாக முதலில் கமிட் செய்திருந்தாராம். அதன் பின்னர், ஷங்கர் வேலை செய்யும் விதம் ஷாருக்கானுக்கு பிடிக்கவில்லையாம். நிறுத்தி நிதானமாக படத்தை எடுப்பவர் ஷங்கர். ஆனால், ஷாருக்கானுக்கு விறுவிறுப்பாக படத்தை எடுத்து விட வேண்டும். இதனால், சங்கரின் எந்திரன் பட வாய்ப்பு வேண்டாம் என நடிகர் ஷாருக்கான் கூறி மறுத்துவிட்டாராம். நடிகர் ஷாருக்கான் வெளியேறிய பின்னர் பிரியங்கா சோப்ராவும், இப்படத்திலிருந்து வெளியேறி விட்டாராம்.
இதன் பின்னர், கமலஹாசன் ப்ரீத்தி ஜிந்தாவை வைத்து எந்திரன் படத்திற்காக போட்டோ ஷூட் எல்லாம் நடத்தியுள்ளார் சங்கர். இந்த ஜோடியும் படத்திலிருந்து விலகிய நிலையில், இறுதியாக ரஜினிகாந்த் ஐஸ்வர்யாராய் இருவரையும் வைத்து எந்திரன் படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படம் வெளிவந்து உலக அளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்து வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.