ரசிகரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை.. ஆத்தாடி அஜித் பெரிய கோபக்காரரா இருக்காரே..!(வீடியோ)

Author: Vignesh
13 February 2024, 11:45 am

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் படங்களில் நடிப்பதோடு சரி எந்த பொது நிகழ்ச்சிக்கோ, திரைப்படம் சார்ந்த விழாக்களிலோ பங்கேற்கவே மாட்டார். இதனை அவர் தனது கொள்கையாகவே பல வருடங்களாக செய்து வருகிறார். இதனை சிலர் பாராட்டினாலும் பெருவாரியான மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

ajith-updatenews360

இந்நிலையில், விடாமுயற்சி படத்தில் பிசியாக நடித்து வரும் அஜித் குமார் அதற்கு அடுத்தபடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ajith-updatenews360

இந்நிலையில், நடிகை ஆர்த்தி அஜித் எப்படிப்பட்டவர் என்று கூறி ஒரு சம்பவத்தை தெரிவித்துள்ளார். ஒருமுறை ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது ரசிகர்கள் கூட்டத்தில் ஒரு ரசிகர் தலையில் தல என்று முடிவெட்டி இருந்ததை காட்டி காட்டி கத்தி கொண்டிருந்தான். இதை கவனித்த அஜித் உள்ளே அனுப்ப சொல்லி போலீஸிடம் சொல்லி அந்த ரசிகரை அழைத்துள்ளனர்.

ajith

ஓடி வந்தவனை பளார் என்று அடித்து விட்டு போய் மொட்டை அடிச்சிட்டு வா மொட்டை அடிச்சிட்டு என்னிடம் வந்து காட்டணும் என்று அசிஸ்டன்ட்டை அனுப்பி மொட்டை அடிக்க வைத்தார். அதன் பின்னர், அவனுடன் போட்டோ எடுத்து விட்டு அது என்ன தலைனு தலையில் எழுதி காட்டுறது அன்பு மனசுல இருந்தால் போதும். இதெல்லாம் பண்ணாத உங்க அப்பா அம்மாவுக்கு பிடிக்குமா என்று கூறி அனுப்பி வைத்திருக்கிறார். தற்போது, நடிகை ஆர்த்தி கூறிய இந்த விஷயம் இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

  • Arun and Archana in Bigg Boss Houseரொமாண்டிக் ஆக மாறிய பிக் பாஸ் வீடு.. அருணை கட்டிப்பிடித்து அழுத அர்ச்சனா!
  • Views: - 387

    0

    0