தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… இன்று ஒரே நாளில் மளமளவென சரிந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
13 February 2024, 11:52 am

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… இன்று ஒரே நாளில் மளமளவென சரிந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது.

சென்னையில் நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,810க்கும், ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ஒரு ரூ.4,759-க்கும், ஒரு சவரன் ரூ.38,072-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.77.00-க்கும் ஒரு கிலோ ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • no individual is bigger than the sport tweet by vishnu vishal கிரிக்கெட்டை விட தனிநபர் பெரியவர் அல்ல- CSK அணியை விளாசிய விஷ்ணு விஷால்