ராம்கி உடன் இருக்கும் இந்த சின்ன பையன் யாருன்னு தெரியுதா? அட இவர்தான்பா அடுத்த முதலமைச்சரே..!

Author: Vignesh
13 February 2024, 12:59 pm

சினிமாவில் காதல், திருமணம் கிசிகிசு என்பது சாதாரண விஷயம்தான். ஆனால் அப்படி உண்மையாக காதலித்து திருமணம் வரை சென்று நிலைத்து வாழ்க்கையை வென்று காட்டிய சினிமா பிரபலங்கள் வெகு சிலரே. அப்படித்தான் பிரபல நடிகரை வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து தற்போது வரை சோகமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் வாரிசு நடிகையான நிரோஷா.

ramki

நடிகவேல் எம்ஆர் ராதாவின் இளைய மகளும் ராதிகாவின் தங்கையுமான நடிகை நிரோஷா 1988ல் வெளியான அக்னி நட்சத்திரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமனார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தார்.

செந்தூரப்பூவே படத்தில் முதன்முறையாக ராம்கிக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருப்பினும், அதை வெளியே சொல்லாமல் தொடர்ந்து ராம்கியுடன் பல படங்களில் ஒன்றாக நடித்தனர். இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

ஒரு கட்டத்தில் காதல் விஷயம் வீட்டிற்கு தெரிந்து நிரோஷாவை எச்சரித்துள்ளனர். ஆனால் அதையெல்லாம் மீறி 1995ல் ராம்கியை கரம் பிடித்தார். தொடர்ந்து சொத்து பிரச்சனை, வீடு ஜப்தி என பல பிரச்சனைகளை இருவரும் சமாளித்தனர்.

திருமணத்திற்கு பின் 2000ஆம் ஆண்டு முதல் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பை மீண்டும் தொடர்ந்தார். என்னதான் இருவரும் மனம் ஒத்து திருமணம் செய்தாலும், இவர்களுக்கு இருக்கும் ஒரே கவலை குழந்தை இல்லாததுதான். இருப்பினும், இந்த ஜோடி இன்றும் மிகவும் அன்யோன்யமாய் உள்ளனர். 28 வருடங்களாகியும் குழந்தைப்பேறு இல்லாமல் வாழ்க்கை வாழ்நது வருகின்றனர்.

ramki

இந்த நிலையில், ராம்கி நடிப்பில் வெளியான இது எங்கள் நீதி திரைப்படத்தில் ராம்கிவுடன் இணைந்து ராதிகா சரத்குமார், நிழல்கள் ரவி, ராஜா உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தனர். இப்படத்தை பிரபல இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் அவர் தன் மகன் விஜயை நடிக்க வைத்தார். அப்போது, படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்யின் இந்த புகைப்படம் தற்போது, ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், அட நம்ம அடுத்த முதலமைச்சர் என்று கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.

ramk vijay
  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 274

    0

    0