பார்த்திபனால் எல்லாவற்றையும் இழந்தேன்… நான் செய்த பெரிய தவறு – வேதனையுடன் கூறிய சீதா!

Author: Rajesh
14 February 2024, 12:46 pm

90ஸ் களில் பிரபல நடிகையாக தென்னிந்திய திரையுலகில் வலம் வந்தவர் நடிகை சீதா. இவர் நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான “ஆண் பாவம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழித்திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் மட்டுமில்லாமல் சன் டிவி, மெகா டிவி, சூர்யா டிவி என பிரபல தொலைக்காட்சி சேனல் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

seetha - updatenews360

இப்படி பிரபல நடிகையாக சீதாவும் நடிகர் பார்த்திபனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். அதோடு ஒரு ஆண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இதனிடையே பார்த்திபன் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை Flirt செய்து வந்ததை பல பத்திரிகைகள் கிசுகிசுக்களாக செய்தி வெளியிட்டது. இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு மனஸ்தாபம் இருந்து வந்துள்ளது. ஒருகட்டத்தில் இருவரும் பிரியலாம் என முடிவெடுத்து 2001ம் ஆண்டு 11 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முறித்து விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன் பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த சீதா சீரியல் நடிகர் சதீஷை மறுமணம் செய்தார். அந்த திருமணமும் சீதாவிற்கு சரியாக அமையவில்லை, விவாகரத்து பெற்றார்கள். சதீஷை விவாகரத்து பெற்ற பின்னர் சீதாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதனால் கோவில் கோவிலாக சென்று மன நிம்மதியை தேடியுள்ளார். அப்போது தான் பார்த்திபன், சதீஷ் இருவரையும் ஒப்பிட்டு பார்த்துள்ளார். சதீஷை விட பல விஷயங்களில் பார்த்திபன் மிகவும் நல்லவராக இருந்துள்ளார் என்பதையும், தன்னை உண்மையிலே காதலித்ததையும் அவர் புரிந்துக்கொண்டு பேட்டி ஒன்றில் பார்த்திபனுக்கு விருப்பம் இருந்தால் தான் மீண்டும் பார்த்துபனுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என கூறினார்.

இந்த விஷயம் பார்த்திபன் காதிற்கு செல்ல, அவர் மிகவும் தெளிவாக பக்குவமாக பதில் அளித்தார். அதாவது, “நான் அழகை எட்ட இருந்து நான் ரசித்திருக்க வேண்டும். அதை விடுத்து அவரை அழைத்து வந்து நான் ஆராதித்தது என்னுடைய தவறு. அந்த அழகு பல இடங்களில் ஆபத்தை ஏற்படுத்திவிட்டது. மேலும், வாழ்க்கை கண்ணாடி போல ஏற்கனவே உடைந்த இந்த கண்ணாடி இனி ஒட்டாது என்று நாசுக்காக பதிலளித்து நீ எங்கிருந்தாலும் நல்லா இரு இனி என்னோடு சேர்ந்து வாழ ஆசைப்பட வேண்டாம். உனக்கு உற்ற நண்பனாக நான் நிச்சயம் இருப்பேன் என கூறி அவரை விட்டு நிரந்தரமாக விலகிவிட்டார்.

இந்நிலையில் பார்த்திபனால் தான் இழந்த விஷயங்கள் குறித்து மிகுந்த வேதனையுடன் கூறியுள்ள நடிகை சீதா, நான் சினிமாவில் பீக்கில் இருந்தபோதே பார்த்திபனை திருமணம் செய்துக்கொண்டேன். அவருடன் குடும்பம் நடத்த சினிமாவில் நடிப்பதில் இருந்து நிறுத்திக்கொண்டேன். திருமணத்திற்கு பின் தனக்கு என்று கிடைத்த தனி இடத்தை தக்க வைத்துக் கொள்ளாமல் விட்டு விட்டதால் தற்போது அந்த இடத்தை பிடிக்க முடியாமல் திணறி கொண்டிருக்கிறேன். இந்த சமுதாயத்தில் வாழக்கூடிய யாராக இருந்தாலும் அவர்களுக்கு என்று ஒரு தனி இடம் இருப்பது மிகவும் அவசியம். அந்த இடத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது. அனுபவம் கற்றுக்கொடுத்த படத்தை வேதனையுடன் கூறியுள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 330

    0

    0