தளபதி 69 படத்திற்கு விஜய் கேட்ட சம்பளம்? ஆடி அசந்துப்போய் தயாரிப்பாளர் சொன்ன பதில்!
Author: Rajesh15 February 2024, 5:50 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு விஜய் அரசியலில் இறங்கிடுவார் என கூறப்பட்டது. ஆனால், சினிமாவிற்கு டாட்டா காட்டும் கடைசி திரைப்படம் விஜய்யின் வரலாறு பேசும் திரைப்படமாக தரமாக இருக்கவேண்டும் என கருதி கடைசியாக தளபதி 69 படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம் விஜய்.
இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளதாகவும் கோட்டா நீலிமா என்பவர் எழுதிய நாவல் ஷூஸ் ஆஃப் தி டெட் கதையை கொண்டு இப்படம் எடுக்கப்படவுள்ளதாம். இந்த கதையில் கோவிந்த் , கோபிநாத் இருவரும் சகோதரர்கள். இவர்களில் கோபிநாத் விவசாயம் செய்யமுடியாமல் தற்கொலை செய்துக்கொள்கிறார்.இதனையடுத்து தனது சகோதரனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்துகிறார் கோவிந்த். இந்த நாவல் விவசாயிகளின் துயரங்களையும் அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் நிர்வாக தோல்விகளையும் தோலுரித்து காட்டியது.
இந்த கதையை தான் தளபதி 69 படத்திற்காக அரசியல் , ஊழல், லஞ்சம் என சீன் பை சீன் பக்கா பொலிட்டிகல் கதையாக தயார் செய்துள்ளாராம் வெற்றிமாறன்.விஜய் அரசியலுக்கு வரவுள்ள நிலையில் கடைசி படமாக இது வெளியானால் தரமான அரசியல் படமாகவும், மிகச்சிறந்த அரசியல் என்ட்ரியாகவும் அமையும் என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஷூஸ் ஆஃப் தி டெட் நாவலின் உரிமையை வெற்றிமாறன் ஏற்கனவே வாங்கி வைத்துவிட்டார் என்றெல்லாம் ஏற்கனவே செய்தியில் பார்த்திருந்தோம்.
அதன் பின்னர் தளபதி 69 படத்தை பிரபல நடிகர் விஷால் இயக்கவுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. விஜய் தளபதி 69 படத்தோடு சினிமாவிற்கு எண்டு போட்டுவிட்டு அடுத்து முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளதால் இப்படத்தில் தரமாக நடிக்க விஜய் முடிவெடுத்துள்ளார். அப்படியிருக்கும்போது விஜய் விஷால் இயக்கத்தில் எல்லாம் நடிப்பாரா? என்பதே சந்தேகமாக இருக்கிறது. இதெல்லாம் நடக்குற காரியமா? என ரசிகர்கள் கலாய்த்தனர் நெட்டிசன்ஸ். ஒருவேளை விஜய் அரசியலில் பின்னடைந்துவிட்டால் மீண்டும் சினிமாவுக்கு வந்து விஷால் இயக்கத்தில் நடிப்பார் என ட்ரோல் செய்தனர்.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், தளபதி 69 படத்திற்காக விஜய் ரூ 200 கோடி சம்பளம் கேட்டாராம். இதை கேட்டதும் சற்று ஆடிப்போன தயாரிப்பு நிறுவனம் சில நொடிகளில் ஓகே சொல்லிவிட்டதாம். காரணம் இது விஜய்யின் கடைசி படம் என்பதால் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் தாறுமாறாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் கணக்குப் போட்டு விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க ஓகே சொல்லிவிட்டதாம். பிரம்மாண்ட பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகவுள்ள இப்படத்தை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மாஸ் ஹிட் கொடுக்க முடிவெடுத்துள்ளதாம்.