மகளிர் விடுதி அருகே பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை மீட்பு… விசாரணையில் இறங்கிய போலீசார்.. துப்பில் கிடைத்த ஷாக் தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2024, 9:47 pm

மகளிர் விடுதி அருகே பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை மீட்பு… விசாரணையில் இறங்கிய போவீசார்.. துப்பில் கிடைத்த ஷாக் தகவல்!

பூந்தமல்லி, ராமானுஜ கூட தெரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான மகளிர் விடுதி உள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பூந்தமல்லி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஏராளமான பெண்கள் இங்கு தங்கி உள்ளனர்.

நேற்று இரவு இந்த வளாகத்தில் உள்ள பகுதியில் பிறந்து சில தினங்களே ஆன பெண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இரண்டு தினங்களாக அழுத நிலையில் எறும்புகள் வைத்தபடி காயங்களுடன் இருந்த குழந்தை மீட்கப்பட்டு எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது இந்த சம்பவம் பெரும் பரபரபை ஏற்படுத்திய நிலையில் இன்றைய தினம் பூந்தமல்லி வருவாய் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மகளிர் விடுதிக்கு சென்று தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

மகளிர் விடுதியில் எவ்வளவு பெண்கள் தங்கியுள்ளனர் அவர்களது விவரம் வேலைக்கு சென்றவர்கள் தற்போது விடுதியில் இருந்து சென்றவர்கள் என அனைவரின் விவரங்களையும் தீவிரமாக சேகரித்து வரும் நிலையில் அந்த பகுதியில் ஏதேனும் சந்தேகப்படும்படி சம்பவம் நடந்ததா என தீவிரமாக விசாரனை செய்து வருகின்றனர்.

இந்த விடுதியில் உள்ள ஒரு கழிவறையில் மட்டும் இருந்த கண்ணாடி ஒன்று எடுத்து சுத்தம் செய்து நிலையில் வைக்கப்பட்டிருந்தது மேலும் வெளியாட்கள் யாரும் உள்ளே வர முடியாத சூழல் இருக்கும் நிலையில் உள்ளே இருக்கும் நபர்களே யாரேனும் குழந்தையை இந்த பகுதியில் வீசினார்களா மேலும் அந்த பகுதியில் பெண்கள் பயன்படுத்தும் அதிக அளவிலான நாப்கின்கள் இருந்ததால் குழந்தையை மேலே இருந்து போட்ட நிலையில் குழந்தை இறக்காமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமின்றி மகளிர் விடுதியை சுற்றிலும் வேறு எந்த குடியிருப்பும் இல்லாத நிலையில் இங்கிருந்து தான் குழந்தையை இந்த பகுதியில் போட்டிருக்க வேண்டும் என போலீசாரும் வருவாய்த்துறை அதிகாரிகளும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

  • nayanthara Happy children’s day…. குழந்தைகளுடன் கொண்டாடிய விக்கி – நயன் தம்பதி – கியூட் கிளிக்ஸ் வைரல்!
  • Views: - 1039

    0

    0