10 ஆயிரம் கொடுக்கச் சொல்லும் அண்ணாமலை… மத்திய அரசு நிதி பற்றி வாய் திறக்காதது ஏன்..? அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி..!!!
Author: Babu Lakshmanan17 February 2024, 12:03 pm
மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி பத்தாது, பத்தாயிரம் வழங்க வேண்டுமென கூறும் பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அரசு இதுவரை நிவாரண நிதி எதுவும் வழங்கப்படவில்லை குறித்து ஏன் கேள்வி கேட்கவில்லை என அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி; உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் தலைமைக் கழகம் அறிவித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காண மாபெரும் பொதுக்கூட்டம் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி மீளவிட்டான் சாலையில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்ன கீதா ஜீவன் பேசும்போது, வரும் 25ம் தேதி மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வருகிறார். அப்போது, பாதிக்கப்பட்ட மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி காணாது, கூடுதலாக பத்தாயிரம் வழங்க வேண்டும் என அவர் கூறி வருகிறார். ஆனால் தமிழகத்திற்கு மழையினால் பாதிக்கப்பட்டதற்கு மத்திய அரசு எந்த ஒரு நிதியும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து முதல்வர் கடிதம் எழுதியும், இதுவரை எந்த ஒரு நிதியும் வழங்கவில்லை. ஆனால், தமிழக அரசு சாலை, உடைந்த பாலம் சாலை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி என அனைத்தும் வழங்கி வருகிறது, எனக் கூறினார்.