கரும்பு விவசாயி சின்னம் முடக்கம்.. புதிய சின்னத்தில் நாம் தமிழர் போட்டி : சம்மதம் சொன்ன சீமான்? பரபரப்பு பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
17 February 2024, 2:00 pm

கரும்பு விவசாயி சின்னம் முடக்கம்.. புதிய சின்னத்தில் நாம் தமிழர் போட்டி : சம்மதம் சொன்ன சீமான்? பரபரப்பு பேச்சு!

கரும்பு விவசாயி சின்னம் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் சீமான் கூறியதாவது, சட்டத்தின் படி, சட்ட வரைமுறையின்படி கரும்பு விவசாயி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு தரப்பட்டிருக்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே திட்டமிட்டே எங்கள் சின்னத்தை மற்ற கட்சிக்கு ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். சின்னத்தை வழங்க மறுப்பது என்பது எனக்கு அழுத்தம் தரும் முயற்சி. சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல்கள் என 6 தேர்தல்களை எதிர்கொண்டுள்ளோம்.

சின்னத்தை பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதில் உடன்பாடு எட்டவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்.

புதிய சின்னம் அறிவிக்கப்பட்டாலும் தற்போதைய அறிவியல் உலகத்தில் அதனை சேர்ப்பது கொண்டு என்பது ரொம்ப எளிதானது. ஆனால், நிச்சயமாக கரும்பு விவசாயி சின்னத்தை பெறுவோம் என தெரிவித்தார்.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!