ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்… படகுகள் நிறுத்தம் : வருவாய் இழப்பு.. வாழ்வாதாரம் பாதிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
18 February 2024, 12:47 pm
Quick Share

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்… படகுகள் நிறுத்தம் : வருவாய் இழப்பு.. வாழ்வாதாரம் பாதிப்பு!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த நான்காம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்று காங்கேசன் கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்ல தாண்டி மீன்பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து இரண்டு விசைப்படகையும் அதில் இருந்த 23 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதில் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து படகின் ஓட்டுனர்கள் இரண்டு பேருக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும் ஒருவர் 2வது முறையாக எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து ஊர் காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டத்தை ஈடுபட்டது மட்டுமல்லாமல் இன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் படகுகளை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதோடு தங்களுடைய படகுகளில் கருப்பு கொடி கட்டி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதனால் நாள் ஒன்றுக்கு பத்து கோடி ரூபாய்க்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதோடு மட்டுமல்லாது நேரடியாகவும், மறைமுகமாகவும் 5000-க்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலைச் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

  • snehan recent news சம்பவம் செய்த சினேகன்…திகைத்து போன கன்னிகா..!என்னவா இருக்கும் ?
  • Views: - 451

    0

    0