பாலியல் வழக்கில் முதல் கணவர்: சங்கர் மகளுக்கு மறுமணம்… பிரம்மாண்ட நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

Author: Rajesh
19 February 2024, 2:19 pm

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடித்த விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடித்த திரைப்படம் விருமன்.

இயக்குனர் முத்தையா இயக்கிய இப்படத்தை நடிகை ஜோதிகாவும் சூர்யா 2D புரோடக்சன்ஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்தார்கள். அதில் கிராமத்து பெண்ணாக நடித்து அதிதி அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கஞ்சா பூவு கண்ணால ‘ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது .

அந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற “வண்ணாரப்பேட்டையில” என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பாடியிருந்தார். இந்த படமும் அவருக்கு நல்ல பிரபலத்தை கொடுத்து மார்க்கெட்டை மேலும் உயர்த்தியுள்ளது. அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் புதிய படமொன்றில் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாம் திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது. ஐஸ்வர்யா ஷங்கருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பிரம்மண்டமாக நடைபெற்ற இத்திருமணத்தில் பல்வேறு திரைபிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர். ஆனால், இந்த திருமண வாழ்க்கை 6 மாதத்திலே முடிவிற்கு வந்துவிட்டது.

காரணம் ரோஹித் மீது பாலியல் புகார் வழக்கு பாய்ந்து தலைமறைவாக இருந்த அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். மேலும் ரோஹித் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதனால் இப்படியே போனால் மகளின் வாழ்க்கை பாதிக்கப்படும் என நினைந்து தம்பதிக்கு மனம் ஒத்துப்போகாமல் – ஐஸ்வர்யா – ரோஹித் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா அப்பா ஷங்கரின் துணை இயக்குனர் தருண் கார்த்திகேயனை இரண்டாவதாக திருமணம் செய்யவுள்ளார். வெகு விமர்சியாக நடைபெற்ற இந்த திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. குறிப்பாக இத்திருமணத்தில் அதிதி மீது தான் அனைவரது பார்வையும் இருந்தது. சாம்பல் நிற உடைக்கு contrast ஆக டார்க் பிங்க் கலர் பிளவுஸ் அணிந்து பார்க்கவே மிகவும் அழகாக இருந்தார் பெண் தோழி அதிதி.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 497

    0

    0