இப்படி ஒரு தரமான படத்தை மிஸ் பண்ணிட்டீங்களே சூர்யா? வெறித்தனமான “வணங்கான்” டீசர்!

Author: Rajesh
19 February 2024, 9:19 pm

வணங்கான் என்ற பெயரும் சூர்யா 41 படத்திற்கு வந்து கூடிய சீக்கிரம் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கதை போக்கு மாறிப்போனதால் சூர்யா வணங்கான் படத்தில் இருந்து விலக்கிவிடப்பட்டதாக பாலா அறிக்கை வெளியிட்டார்.

vanangaan

இதற்கு காரணம் பாலா, சூர்யா இடையே கருத்து வேறுபாடும் சண்டையும் தான் காரணம் என்று கூறிப்படுகிறது. மேலும் அவரை கொடுமை படுத்தி டார்ச்சர் செய்து… அதிகம் பணம் பிடிங்கி செலவழித்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் படமே வேண்டாம் என கூறிவிட்டு சூர்யா விலகிக்கொண்டார். இது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதையடுத்து இப்படத்தில் அருண் விஜய் கமிட் ஆனார். ஆனால், அருண் விஜய்யால் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு இயக்குனர் பாலா டாச்சர் செய்து வந்ததாகவும் இருந்தாலும் தன்னிடம் இருக்கும் திறமையை பாலா போன்ற இயக்குநர்களால் தான் வெளிக்கொண்டுவர முடியும் என நம்பி எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கொண்டு தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்தாராம் அருண் விஜய்.

அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதில் அருண் விஜய் உடல் முழுக்க சேறு பூசிக்கொண்டு ஒரு கையில் பெரியார்.. மறுகையில் பிள்ளையார் வைத்துக்கொண்டு மிரட்டலான தோற்றத்தில் இருந்தார். இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் அருண் விஜய் பிதாமகன் சூர்யா போன்று மிரட்டலான லுக்கில் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.இப்படத்தை இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த டீசர் வீடியோ:

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?