அப்போ அது வதந்தி இல்லையா?.. பிரபல நடிகையுடன் காதல்.. 2-ம் திருமணம் செய்ய ஆசைப்பட்ட சரத்குமார்..!
Author: Vignesh20 February 2024, 11:13 am
தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான சரத்குமார் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதியாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவராக அறியப்பட்ட இவர் பின்னாளில் சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட சரத்குமார் வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் பெற்றார் . அதன் பின்னர் அவர் சினிமாவில் நடித்த போது நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட காதலால் மனைவி சாயாதேவி அவரை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் நடிகை ராதிகாவை முறைப்படி இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

தற்போது முன்னாள் மனைவியுடன் நட்பாக பழகி வருகிறார் சாத்குமார். தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். போர் தொழில் திரைப்படத்தில் சரத்குமாரின் நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தது.
இந்நிலையில், சரத்குமார் குறித்து பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதாவது, சரத்குமார் தேவையாணியுடன் சேர்ந்து பல படங்களில் ஜோடியாக நடித்திருந்த நிலையில், அப்படி இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்து காதலும் உருவாகியது என்றும் கிசுகிசுகளும் எழுந்தது.
அப்போது, அந்த நேரத்தில், தான் விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் விக்ரம் இயக்கத்தில் சரத்குமார், விக்ரம், தேவயானி போன்றவர்கள் நடிப்பில் உருவான படம் வெளியாகி பிளாப்பானது. படத்தின் சூட்டிங் சமயத்தில் சரத்குமாருக்கும் விக்ரமுக்கும் முதல் ஷார்ட் என்பதால் காலையிலிருந்து காத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், இருவரையும் இயக்குனர் கூப்பிடவே இல்லையாம். ரொம்ப நேரம் கழித்து தான் தெரிந்தது நடிகை தேவயானியை வைத்து இயக்குனர் சின்ன காட்சியை எடுத்துக் கொண்டிருக்கிறார். இதனை அறிந்து சரத்குமார் கோவத்தில் இயக்குனரிடம் சண்டையிட்டு அடிதடி வரைக்கும் சென்றதாம். காலையிலிருந்து உட்கார்ந்து இருக்கோம். ஒரு ஷாட் கூட எடுக்கல சின்ன சீனை இத்தனை நேரமா தேவயானி வைத்து எடுத்திருக்கிறார் என்று கண்டபடி சரத்குமார் பேசினாராம்.
அதன் பின்னர், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இடையில் நின்று அந்த பிரச்சினையை சரி செய்து மீண்டும் படத்தை ஆரம்பித்து முடித்தனர். அந்த படத்திற்கு பின் தான் தேவயானி மீது சரத்குமாரிடம் அதிக ஈர்ப்பு வந்து காதலும் செய்திருக்கிறார்கள். தேவயானியும் அதற்கு ஓகே சொல்லி இருக்கிறார். அதன்பின் தான் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு சரத்குமார் – தேவயானி பிரிந்ததாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் நக்மா, ஹீராவுடன் காதலில் இருந்து பின் தேவயானியை சரத்குமார் காதலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.