காரு, பங்களா-னு வாழ இதுதான் காரணமா..? ஆலியா மானசாவை சிக்க வைத்த MLM நிறுவனம்… போலீசில் பரபர புகார்..!

Author: Vignesh
21 February 2024, 1:40 pm

சின்னத்திரையில் நுழைந்த சில காலங்களிலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தவர். மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆன இவர் அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தார்.

பிரவீன் பென்னட் இயக்கிய ராஜா ராணி தொடரில் சஞ்சீவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. தனது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஆல்யா தனது காதலன் சஞ்சீவை திருமணம் செய்தார்.

இவர்களுக்கு ஐலா மற்றும் அர்ஷ் என இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். அண்மையில் தான் இரண்டாவது மகன் பிறந்தார், குழந்தை பிறந்ததற்கு பிறகு ஆல்யா மானசாவின் உடல் எடையும் அதிகரித்தது. முன்னதாக, புதிய சீரியலில் கமிட்டாகி இருக்கும் ஆல்யா 2 மாதத்தில் 10 கிலோ வரை எடையை குறைத்து ஆச்சரியப்படுத்தி இருந்தார்.

alyamanasa_Sanjeev_Updatenews360

இந்நிலையில், ஆல்யா இனியா சீரியலிலும், நடிகர் சஞ்சீவ் கயல் என்ற தொடரிலும் நடித்து வருகின்றனர். இந்த இரண்டு தொடர்களும் சன்டிவியில் தான் ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆல்யா விவாகரத்து செய்தி வரும் போதெல்லாம், நாங்கள் சிரித்துக் கொண்டுதான் இருப்போம். பெரிதாக எந்த ரியாக்ஷனும் கொடுக்கப் போவது இல்லை. அதேபோல், கூடவே இருந்து சிலர் ஏமாற்றுவதை பார்த்து ஆரம்பத்தில் கோபப்பட்டு இருந்தேன். பழிவாங்க வேண்டும் என்றெல்லாம் ஆரம்பத்தில் நினைப்பேன் இப்போது அந்த சிந்தனை இல்லை என பேசி இருந்தார்.

இந்நிலையில், ஆல்யா எம்எல்எம் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறி நிறுவனத்தில் இருப்பவர்கள் மற்ற பிரபலங்களுக்கு போன் செய்து அணுகியுள்ளனர். இதனால், இது குறித்து நிறுவனம் பற்றி தெரியாத ஆலியா மானசா ஐயோ அது நான் இல்லை. நாங்கள் எந்த நிறுவனத்திலும் முதலீடு செய்யவில்லை. இதை நம்ப வேண்டாம் என தன்னை கேட்டவர்களை உஷார் படுத்தியுள்ளார். மேலும், தனது கணவர் சஞ்சீவுடன் இணைந்து பேசிய ஆல்யா தனது பெயரை வைத்து மோசடி நடப்பதாக புகார் அளித்துள்ளார்.

alya manasa

மேலும், வீடு, கார், பைக் என எல்லாமே இஎம்ஐ மூலம் தான் வாங்கி இருப்பதாகவும், இப்போதும் இஎம்ஐ கட்டிக் கொண்டிருப்பதாகவும், எங்கள் நடிப்பில் கிடைக்கும் சொந்தப்பணத்தில் தான் வாழ்க்கையை நடத்துகிறோம். நாங்கள் எந்த நிறுவனத்திலும் முதலீடு செய்யவில்லை என இருவரும் விளக்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Ajith Kumar team 3rd place in dubai car race நம்ம ஜெயிச்சுட்டோம் நண்பா…ஆனந்த கண்ணீரில் அஜித்…துபாய் 24H கார் ரேஸில் கெத்து காட்டிய அஜித் அணி..!
  • Copyright © 2024 Updatenews360
    Close menu