ஆயிரம் கோடி சொத்துக்கு அடக்கமான மாப்பிள்ளை…. மகளின் மறுமணத்தில் ஷங்கரின் மாஸ்டர் பிளான்!
Author: Rajesh21 February 2024, 4:07 pm
இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இயக்குனர் ஷங்கருக்கு அதிதி ஷங்கர், ஐஸ்வர்யா ஷங்கர், அர்ஜித் ஷங்கர் என இரண்டு மகன்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். இதில் அதிதி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாம் திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது. ஐஸ்வர்யா ஷங்கருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பிரம்மண்டமாக நடைபெற்ற இத்திருமணத்தில் பல்வேறு திரைபிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர். ஆனால், இந்த திருமண வாழ்க்கை 6 மாதத்திலே முடிவிற்கு வந்துவிட்டது.

காரணம் ரோஹித் மீது பாலியல் புகார் வழக்கு பாய்ந்து தலைமறைவாக இருந்த அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். மேலும் ரோஹித் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதனால் இப்படியே போனால் மகளின் வாழ்க்கை பாதிக்கப்படும் என நினைந்து தம்பதிக்கு மனம் ஒத்துப்போகாமல் – ஐஸ்வர்யா – ரோஹித் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
இதையடுத்து ஐஸ்வர்யா அப்பா ஷங்கரின் துணை இயக்குனர் தருண் கார்த்திகேயனை இரண்டாவதாக திருமணம் செய்யவுள்ளார். வெகு விமர்சியாக நடைபெற்ற இந்த திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தருண் கார்த்திகேயன் எந்திரன் இரண்டாம் பாகம் எடுக்கும் போது தான் ஷங்கர் டீமில் சேர்ந்தாராம். அவர் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர். ஷங்கருக்கு அட்லி எப்படி பிடித்தமானவராக இருந்தாரோ, அதே போல தருண் கார்த்திகேயன் ஷங்கருக்கு பிடித்தமானவராக இருக்கிறார்.
எனவே, தருண் தனது மகளுக்கு பொருத்தமானவராக இருப்பார் என்று முடிவுக்கு வந்து இருக்கிறார். ஏன் என்றால், பல கோடி சொத்து வைத்திருந்த ரோகித் எப்படிப்பட்டவர் என்று தெரியாமல் பெண்ணை கொடுத்து மன வேதனைப்பட்ட ஷங்கர் தனது ஆயிரம் கோடி சொத்துக்கு தன் கைக்கு அடக்கமானவராக இருக்கும் தருணை மாப்பிள்ளையாக தேர்வு செய்து இருக்கிறார் என்று பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.