சத்துணவு சாப்பிட்ட 10 பள்ளி குழந்தைகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு… அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி…!!

Author: Babu Lakshmanan
22 February 2024, 9:45 am

ராமேஸ்வரம் அருகே சத்துணவு சாப்பிட்ட 10 பள்ளி குழந்தைகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமேஸ்வரம் அருகே வடகாடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் சத்துணவு சாப்பிட்ட 30க்கு மேற்பட்ட பள்ளி குழந்தைகளில் 10 குழந்தைகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள், பதறி அடித்து அரசு தொடக்கப்பள்ளிக்கு வந்தனர்.

பின்னர், அவர்களை மீட்ட பெற்றோர்கள் சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால், அரசு மருத்துவமனையே பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர், சிகிச்சை பெற்ற குழந்தைகள் நலமுடன் வீடு திரும்பினர்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!