பாக்யராஜிற்கு தங்கையாக நடித்த இந்த சிறுமியை ஞாபகம் இருக்கா? இப்போ அவங்க ஒரு பிரபலம்..!
Author: Vignesh22 February 2024, 12:35 pm
தமிழ் சினிமாவில் 70 காலத்தில் மும்மணி இயக்குனராகவும் நடிகராகவும் ரசிகர்களை கவர்ந்தவர் கே. பாக்யராஜ் தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர் , திரைக்கதை அமைப்பாளர் , இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர், நிகழ்ச்சி நடுவர் இப்படி பல கலைகள் கொண்டிருப்பவர் பாக்யராஜ்.
16 வயதினிலே படத்தில் உதவியாளராக பணியாற்றி தனது திரை வாழ்க்கையை துவங்கினார். பின் பாரதிராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் உதவி இயக்குனர் மற்றும் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்திருந்தார்.
பாரதிராஜாவின் மூன்றாவது படமான சிகப்பு ரோஜாக்கள் படத்தில் அவரது ரோல் மக்கள் மனதில் நின்றது. அவர் அவர் பேசிய வசனமும் அவரே எழுதியது தான். அதன் பின்னர் புதிய வார்ப்புகள் படத்தில் பாரதிராஜா, பாக்யராஜை வசனகர்த்தாவாக மட்டுமன்றி, கதாநாயகனாகவே அறிமுகம் செய்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவரது முந்தானை முடிச்சு திரைப்படம் இன்றும் மக்களை டிவி முன்பு அமரவைக்கும்.
முன்னதாக, இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்த பாக்யராஜ் நடிப்பிலும் பல ரசிகர்களின் மனதை வென்று முன்னணி நடிகராகவும் வலம் வந்தார். 1984 இல் பாக்யராஜ் தாவணி கனவுகள் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். அந்த படத்தில், பாக்யராஜின் குட்டி தங்கை கதாபாத்திரத்தில் ஒரு சிறுமி நடித்திருப்பார். அந்த சிறுமி வேறு யாரும் இல்லை தற்போது, தொகுப்பாளினியாக இருக்கும் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் நடித்துவரும் பிரியதர்ஷினி தான்.