இப்போ காண்டம்… அடுத்து வயாகராவா..? ஆந்திராவில் அரசியல் கட்சிகளின் அட்ராசிட்டி… வேற லெவல் பிரச்சார யுக்தி!

Author: Babu Lakshmanan
22 February 2024, 2:32 pm

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆந்திராவின் முக்கிய பிரதான கட்சிகள் ஆணுறையில் தங்களது கட்சியின் சின்னத்தை பொறித்து மக்களுக்கு விநியோகித்து வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு வரும் மார்ச் 9ம் தேதி வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஏப்ரல் மாதத்தின் 2வது வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவைப் பொறுத்தவரையில் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.

ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் முன்னணி எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) ஆகிய இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. எனவே, தற்போது முதலே இரு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரு கட்சியினரிடையேயும் ஆணுறை தேவை ஏற்பட்டுள்ளது. அதாவது, தங்களின் கட்சி சின்னத்தை ஆணுறையின் பாக்கெட்டில் அச்சிட்டு, பொதுமக்களுக்கு விநியோகித்து வருகின்றனர்.

ஆந்திரா அரசியலில் தேர்தல் பிரச்சாரத்தில் ஆணுறை முக்கிய பங்காற்றி வரும் நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்களை வீடு வீடாகச் சென்று சந்திக்கு இந்தக் கட்சியினர், ஆணுறை பாக்கெட்டுகளை விநியோகித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இருவரும் கட்சியின் சின்னத்துடன் ஆணுறைகளை விநியோகித்து வந்தாலும், ஆணுறைகளை விநியோகிப்பதற்காக ஒருவரையொருவர் திட்டிக்கொள்கின்றனர்.

“இது ஆணுறையுடன் நிறுத்தப்படுமா அல்லது பொதுமக்களுக்கு வயாகராவையும் கொடுக்கத் தொடங்கி விடுவார்களா..?” என்று ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 341

    0

    0